ஸ்ரீநாத் எம்.எல்.ஏ’வுக்கு காங் மாவட்ட தலைவர் சகாயராஜ் வாழ்த்து
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்ற நடிகர் ஸ்ரீநாத் எம்.எல்.ஏ’வுக்கு, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.சகாயராஜ் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்டத் தலைவர் எஸ்.எம்.சகாயராஜ் தலைமையில் கூட்டணி கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத்’தை மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர்கள் செந்தூர்பாண்டி, ஐசன்சில்வா, மாவட்ட பொதுச் செயலாளர்கள் கோபால் மைக்கேல் பிரபாகர் மாவட்டச் செயலாளர் இக்னேசியஸ், மாவட்டத் துணைத் தலைவர்கள் அந்தோணி ஜெயராஜ், ராஜாராம், ரூஸ்வெல்ட் ஜெபராஜ், மாவட்டத் துணை அமைப்பு தலைவர்கள் மாணவர் காங்கிரஸ் பிளஸி, அமைப்புசாரா பிரிவு நிர்மல் கிறிஸ்டோபர், வழக்கறிஞர் பிரிவு பர்ணபாஸ், எஸ்.சி பிரிவு பிரபாகர், இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ரெனிஸ் பாபு, அருள், மகளிர் காங்கிரஸ் வசந்தி, வார்டு தலைவர்கள், மற்றும் செயலாளர்கள் சிமியோன், மகாலிங்கம், ராஜ்குமார், அலெக்சாண்டர், ராஜரத்தினம், ராஜகோபால் உட்பட மாநகர் மாவட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
