செய்திகள்அண்மை செய்திகள்

தூத்துக்குடியில் “555 PITSHOP” கார்கேர்’ கீதா ஜீவன் திறந்து வைத்தார்

Share the news

தூத்துக்குடி குறிஞ்சி நகரில் “555 PITSHOP” என்ற நவீன கார்கேர் நிறுவனத்தை திமுக மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்

தூத்துக்குடி குறிஞ்சி நகர் மெயின் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ‘ 555 PITSHOP ‘ கார் வாகனம் உதிரி பாகங்கள் விற்பனையகத்தை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், ரிப்பன் கத்தரித்து திறந்து வைத்தார். தொடர்ந்து கீதா ஜீவன், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் முதல் விற்பனையை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மணி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் வரவேற்றனர்.

திறப்பு விழாவில் திமுக பொறியாளர் அணி மாநில துணை செயலாளர் அன்பழகன், மண்டல தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல் ராஜ், மாவட்ட பிரதிநிதி செல்வகுமார், மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன், அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமார் வட்ட செயலாளர் கங்கா ராஜேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன