போத்தி விநாயகர் சதூர்த்தி விழா அன்னதானம். முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் தொடங்கி வைத்தனர்
புதிய பேருந்து நிலையம் போத்தி விநாயகர் ஆலய சதுர்த்தி விழா – வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தனர்.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள போல்பேட்டை போத்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் வருஷாபிஷேக விழா கோலாகலமாக செப்டம்பர் 14ல் நடைபெற்றது.
போத்தி விநாயகர் ஆலய விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், சிறப்பு அலங்காரம் மற்றும் மஹா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற தீபாராதனையில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தர்மகர்த்தா என்.பி.ராஜா பெரியசாமி, மற்றும் தொழிலதிபர் என்.பி.அசோக் ஆகியோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
போத்தி விநாயகர் ஆலயத்தை உருவாக்கி கடந்த 44 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்திய முன்னாள் தர்மகர்த்தாவும், மறைந்த சட்டமன்ற உறுப்பினர் என்.பெரியசாமி திடலில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட அன்னதானம் நடைபெற்றது.
இந்த அன்னதான நிகழ்வை முன்னாள் அமைச்சர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பெ.கீதாஜீவன் மற்றும் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு அறுசுவை உணவை பரிமாறினர்.
இவ்விழாவில் கோவில் செயலாளர்கள் செல்வராஜ், செல்வக்குமார், பொருளாளர் வேல்சாமி, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அ.முத்துச்செல்வம், ரத்தினசாமி, தொமுச பேச்சிமுத்து, ஜீவானந்தம், ராஜாமணி, சி.என்.ரவீந்திரன், கீதா முருகேசன், என்.சி.நாராயணன், பாஸ்கா், பாலமுருகன், சரவணன், தங்கச்சந்திரன், முருகேசன், ஆழ்வார்ராஜ், மந்திரமூர்த்தி, ராம்குமார், ராஜேந்திரன், அர்ஜூனன், பெரியசாமி, செல்வக்குமார், சித்திரைச்செல்வன், இளஞ்சூரியன், சேகர்மணி, கணேஷ், சண்முகசுந்தரம், முத்துராஜா மற்றும் கவுன்சிலர் ஜாக்குலின் ஜெயா, திமுக பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ஜெயக்குமார், மாணவரணி அமைப்பாளர் சின்னதுரை, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், வட்டச் செயலாளர் கங்கா ராஜேஷ், பகுதி பிரதிநிதி பிரபாகர், ஜேஸ்பர், ஆவுடையப்பன், கீதா மாரியப்பன் மற்றும் போல் பேட்டை பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
விழாவின் நிறைவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
