தூத்துக்குடி சில்வர்புரம் பரிசுத்த தோமா ஆலயம் நூற்றாண்டு சந்தோஷப் பெருவிழா
சிஎஸ்ஐ தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலம், ராஜகோபால் நகர் சேகரத்திற்கு உட்பட்ட சில்வர்புரம் பரிசுத்த தோமா ஆலயத்தின் நூற்றாண்டு விழா “சந்தோஷப் பெருவிழா”வாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது
சில்வர்புரம் பரிசுத்த தோமா ஆலய நூற்றாண்டு விழாவின் முக்கிய நிகழ்வாக சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆராதனையில், DS குரூப் ஆஃப் கம்பெனிஸ் தலைவர் அருட்திரு டாக்டர் சௌந்திரபாண்டியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தேவசெய்தி வழங்கினார். இறைவனின் ஆசீர்வாதத்தையும், ஆலயத்தின் நூறாண்டு வரலாற்றுச் சிறப்பையும் அவர் தனது செய்தியில் எடுத்துரைத்தார்.
விழாவில் ராஜகோபால் நகர் சேகர தலைவர் அருட்திரு ரவி அனைவரையும் வரவேற்றார். வேம்பார் சேகர தலைவர் அருட்திரு டேனியல் எட்வின், பேராயர் ராபர்ட் கால்டுவெல் சபைமன்றத் தலைவர் அருட்திரு செல்வின்துரை, சபை ஊழியர் ஜான்சன் சுரேஷ், பண்டாரம்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் மற்றும் சேகர, சபை நிர்வாகிகள் இன்பராஜ், மணி, மோசஸ் உள்பட சபை விசுவாச மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
