30 ஆண்டுகால சமூக சேவை: மதர் டிரஸ்ட் இயக்குநர் கென்னடிக்கு சாதனையாளர் விருது
மதர் ட்ரஸ்ட் இயக்குநர் எஸ்.ஜே. கென்னடிக்கு, 30 ஆண்டுகாலச் சமூக சேவையைப் பாராட்டி ‘சிறந்த சமூக சேவைக்கான சாதனையாளர் விருது மக்கள் மறுமலர்ச்சி தடம்’ அமைப்பு சார்பில் வழங்கப்பட்டது
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் துளிர்கள் அரங்கத்தில், மக்கள் மறுமலர்ச்சி தடம்’ அமைப்பு சார்பில் சாதனையாளர் விருது வழங்கும் விழா மற்றும் “நாம் யார்?” என்ற கருத்தரங்கு நடைபெற்றது.
விழாவில், மதர் சமூக சேவை நிறுவன இயக்குநரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநிலத் தலைவருமான டாக்டர் எஸ்.ஜே. கென்னடிக்கு, கடந்த 30 ஆண்டுகாலச் சிறந்த சமூக சேவையைப் பாராட்டி ‘சிறந்த சமூக சேவைக்கான சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது.
சமூக ஆர்வலர் பெ.தமிழ்ச் செல்வன் தலைமை தாங்கிய இந்நிகழ்ச்சிக்கு,கி.இசக்கிமுத்து வரவேற்புரை ஆற்றினார். அமைப்பு நிறுவனரும் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவர்
க.கோ.இராஜவர்தனன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விருதினை வழங்கிச் சிறப்பித்தார். காயல் முருகேசன், முன்னோடி தமிழன், கு.அம்பேத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சொ.சு.தமிழினியன் நோக்க உரையாற்றினார். சு.முத்துராமன் நன்றியுரை கூறினார்.
மதர் ட்ரஸ்ட் டாக்டர் எஸ்.ஜே. கென்னடி, ஏழை எளியோரின் பொருளாதார மேம்பாடு, கல்வி மற்றும் இளைஞர் முன்னேற்றத்திற்காகப் பணியாற்றி வருகிறார். குறிப்பாக, தமிழ்நாட்டில் முதன்முறையாக ஒரு கோடி பனைமர விதைகள் நடும் பணியைத் தொடங்கி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலத்தடி நீர் மேம்பாட்டிற்காகத் தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், பள்ளி மாணவர்களிடையே பனை பாதுகாப்பு மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர் மதர் டிரஸ்ட் இயக்குனர் டாக்டர் கென்னடி என்பது குறிப்பிடத்தக்கது.
விருது பெற்ற மதர் டிரஸ்ட் இயக்குனர் கென்னடிக்கு நீதிபதி வ.இராமலிங்கம், முன்னாள் துணைவேந்தர் த. ஆறுமுகம், மாவட்ட வன அலுவலர் மு.இளையராஜா உள்ளிட்ட பல அரசு அதிகாரிகளும், சமூக ஆர்வலர்களும் விருது பெற்ற டாக்டர் எஸ்.ஜே. கென்னடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
