அண்ணா பிறந்தநாளில் தூத்துக்குடியில் தேமுதிகவினர் அண்ணா சிலைக்கு மரியாதை
பேரறிஞர் அண்ணா சிலைக்கு தூத்துக்குடி தேமுதிக மாநகர் மாவட்ட செயலாளர் தயாளலிங்கம் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
தூத்துக்குடி,
தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, இன்று காலை தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் முழு உருவச் சிலைக்கு, தேமுதிக தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் தயாளலிங்கம் தலைமையில், கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந் நிகழ்ச்சியில் தேசிய முற்போக்கு திராவிடக் கழக மாநகர் மாவட்ட நிர்வாகிகள் சம்சுதீன், லிவிங்ஸ்டன், ராஜபொம்மு, செல்வம், கோபாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், கணேசமுருகன், விக்னேஷ் ராஜ், பகுதி செயலாளர்கள் அரசமுத்து, அந்தோணிராஜ், சார்பு அணி நிர்வாகிகள் மணிகண்டன், அரசமுத்து, ஒன்றிய நிர்வாகிகள் முத்துக்குமார், மாரியப்பன், அனவர்தம், மாரிமுத்து, பாலமுருகன், சுப்பு, மல்ராஜ், மணி, திருமணி முருகன், ராமசாமி, மாரிதுரை, முருகன், மகளிர் அணியினர் தாளமுத்து கனி, அன்னலட்சுமி, ரேவதி, சுந்தரி, நந்தினி, மற்றும் தேமுதிக நிர்வாகிகள், மகளிரணியினர், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
