செய்திகள்அண்மை செய்திகள்

உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் 6வது ஆண்டாக இடம் பெற்று வஉசி கல்லூரி உதவி பேராசிரியர் செல்வம் சாதனை

Share the news

உலகின் தலைசிறந்த 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் தொடர்ந்து 6-வது ஆண்டாக இடம் பெற்று தூத்துக்குடி வஉசி கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் ஜே.செல்வம் சாதனை. பல்வேறு தரப்பினர் பாராட்டு

தூத்துக்குடி,
​அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் எல்சேவியர் பி.வி. நிறுவனம் ஆகியவை இணைந்து ஆண்டுதோறும் வெளியிடும் உலகின் தலைசிறந்த 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியின் புவியியல் (நிலத்தியல்) துறையின் உதவிப் பேராசிரியரான முனைவர் செல்வம் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக (2021, 2022, 2023, 2024, 2025 மற்றும் 2026) இடம்பெற்று பெரும் சாதனை படைத்துள்ளார்.
​இப்பட்டியல் உலகளவில் 22 அறிவியல் துறைகள் மற்றும் 176 துணைத் துறைகளில் சிறந்து விளங்கும் விஞ்ஞானிகளை அடையாளம் காண்கிறது. ஸ்கோபஸ் (Scopus) தரவுத்தளத்திலிருந்து பெறப்படும் மேற்கோள் தாக்கம் மற்றும் எச்-குறியீடு உள்ளிட்ட தரப்படுத்தப்பட்ட அறிவுசார் அளவீடுகளின் அடிப்படையில் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சித் திறன் மதிப்பிடப்படுகிறது.
​
ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் எல்சேவியர் தரவுக் களஞ்சியம் வெளியிட்ட 2026 ஆம் ஆண்டிற்கான தரவரிசையில், உலக அளவில் 56,663 வது இடத்தை முனைவர் செல்வம் பெற்றுள்ளார். இது கடந்த 2025 ஆம் ஆண்டில் அவர் பெற்றிருந்த 57,017 ஆவது இடத்திலிருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
​சுற்றுச்சூழல் அறிவியல் துறை (உலக அளவில்): 1,40,934 ஆராய்ச்சியாளர்களில் 1,253 ஆவது இடமும். ​சுற்றுச்சூழல் அறிவியல் துறை (இந்திய அளவில்): 74 ஆவது இடமும். ​அனைத்துத் துறைகளிலும் இந்திய அளவிலான 6,922 ஆராய்ச்சியாளர்களில் 1,042 ஆவது இடமும் (முதல் 0.15 சதவீத இடத்திற்குள்). தமிழ்நாட்டில் புவியியல் துறையில் முதலிடமும். மேலும் ஒட்டுமொத்தமாக 6,100-க்கும் மேற்பட்ட ஆய்வு மேற்கோள்களைப் முனைவர் செல்வம் பெற்றுள்ளார்.
​இந்த மதிப்புமிக்க சர்வதேச அங்கீகாரம், அறிவியல் ஆராய்ச்சியில் முனைவர் செல்வம் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் அர்ப்பணிப்பையும், சுற்றுச்சூழல் அறிவியல், புவியியல் மற்றும் தொடர்புடைய ஆராய்ச்சித் துறைகளில் அவர் ஆற்றிவரும் சிறப்பான பங்களிப்புகளையும் உலகிற்கு எடுத்துரைக்கிறது.

மேலும், இச்சாதனை புவியியல் துறைக்கும் வ.உ.சி கல்லூரிக்கும் பெருமை சேர்ப்பதுடன், கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சித் திறனை உலகளவில் உயர்த்திப் பெருமை சேர்த்துள்ளது. தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இத்தகைய உயரிய சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ள முனைவர் செல்வத்திற்கு, வ.உ.சி கல்லூரி செயலர் ஏபிவிசி.சொக்கலிங்கம் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார். அறிவியல் ஆராய்ச்சியில் அவர் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் சிறப்பான செயல்பாடுகளையும், முன்னேற்றத்திற்காக அவர் மேற்கொண்டு வரும் அர்ப்பணிப்பான பணிகளையும் அவர் பாராட்டினார். உடன் வ.உ.சி கல்லூரியின் முதல்வர் வீரபாகு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். தூத்துக்குடி சுப்பையா புரத்தில் வசித்து வரும் உதவிப் பேராசிரியர் முனைவர் ஜே.செல்வத்திற்கு கல்வியாளர்கள், தொழில் முனைவோர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன