செய்திகள்அண்மை செய்திகள்

கோவில்பட்டி MLA ஆபிஸ் கீதாஜீவன் திறந்து வைத்தார்

Share the news

கோவில்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், கா.கருணாநிதி எம்எல்ஏ முன்னிலையில் திறந்து வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கா.கருணாநிதி எம்.எல்.ஏ. முன்னிலையில் முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் திறந்து வைத்தார்.

பின்னர் சட்டமன்ற உறுப்பினர் கா.கருணாநிதிக்கு மாவட்ட செயலாளர் கீதா ஜீவன், மாணிக்க ராஜா, நகர்மன்ற தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் திமுகவினர், கூட்டணி கட்சியினர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் சட்டமன்ற உறுப்பினர் கா.கருணாநிதி கூறுகையில்; கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக போட்டியிட கழகத் தலைவர் முக.ஸ்டாலின் அவர்களிடம் பேசி வாய்ப்பை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல், தலைவரின் உத்தரவின்படி, இளைஞர் அணி செயலாளர் எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கழகத் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., ஆகியோரின் ஆலோசனையின் பேரில் கோவில்பட்டி தொகுதியில் திமுக வெற்றிபெற சாதுர்யமாகவும் சிறப்பாகவும் தேர்தல் பணியாற்றியதோடு, திமுக நிர்வாகிகளையும் தொண்டர்களையும் ஒருங்கிணைத்து உற்சாகப்படுத்தி கூட்டணி கட்சிகளையும் அரவணைத்து கோவில்பட்டியில் திமுகவின் சாதனை வெற்றிக்கு முக்கிய காரணமான மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் அவர்களுக்கும், உடன் இணைந்து கடுமையாக உழைத்த கழக தோழர்களுக்கும், கூட்டணி கட்சியினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் யூனியன் சேர்மன் மாணிக்கராஜா, நகர்மன்ற தலைவர் மதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், திமுக ஒன்றிய செயலாளர்கள் பீக்கிலிபட்டி முருகேசன், சின்ன பாண்டியன், ஜெய கண்ணன், ராதாகிருஷ்ணன், கிழக்கு நகர செயலாளர் சுரேஷ், மகளிர் தொண்டரணி சமூக வலைத்தள அமைப்பாளர் அறங்காவலர் இந்துமதி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பழனிக்குமார், ஐடி விங் கற்பகம், திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தொகுதி மக்களிடம் பல்வேறு வகையான கோரிக்கை மனுக்களை சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி பெற்றுக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன