செய்திகள்அண்மை செய்திகள்

கேவிகே.சாமி நினைவு நாளில் அவரது சிலைக்கு, முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாியாதை செய்தார்

Share the news

தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் கே.வி‌.கே.சாமி யின் 70 வது ஆண்டு நினைவு நாளில், அவரது சிலைக்கு, முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நெல்லை – தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் முதல் திமுக மாவட்ட செயலாளராகவும், பல்வேறு தொழிற்சங்கங்களின் தலைவராகவும், தூத்துக்குடி நகரசபை உறுப்பினராகவும் பணியாற்றி 20.09.1956ம் ஆண்டு மறைந்த கே.வி.கே.சாமியின் நினைவைப் போற்றும் வகையில், தூத்துக்குடி மாவட்டம் 1986-ஆம் ஆண்டு பிரிக்கப்பட்ட பின்னர் புதிதாக கட்டப்பட்ட தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்திற்கு அப்போதைய முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி, கே.வி.கே.சாமியின் பெயரைச் சூட்டி அவருக்கு புகழாரம் சூட்டினார்.


இந்நிலையில், கே.வி.கே.சாமியின் 70-வது நினைவு நாளையொட்டி, தூத்துக்குடி அந்தோணியார் கோவில் வஉசி சந்தை அருகில் அமைந்துள்ள கேவிகே.சாமி சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மண்டலத் தலைவர் பாலகுருசாமி, பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன், வட்டச் செயலாளர்கள் பொன்ராஜ், கங்கா ராஜேஷ், சுரேஷ் மகாராஜன், லியோ ஜான்சன், கவுன்சிலர் பேபி ஏஞ்சலின், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், மாநகராட்சி ஓய்வூதியர் சங்க மாநகர தலைவர் இரா.மாடசாமி, சேவியர், வட்டப் பிரதிநிதி பாஸ்கர், சுமன், மணி உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன