மன்னன் பூலித்தேவன் பிறந்தநாள், முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மரியாதை செலுத்தினார்
சுதந்திரப் போராட்ட வீரர், “மன்னன் பூலித்தேவன்” 311வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் புகழ் வணக்கம் செலுத்தினார்
தூத்துக்குடி,
இந்தியாவில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முதன்முதலில் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர், “மன்னன் பூலித்தேவன்” 311வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அரங்கில் வைக்கப்பட்டிருந்த மன்னன் புலித்தேவன் திருவுருவப் படத்திற்கு, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன் மலர் தூவி மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின், அவைத் தலைவர் செல்வராஜ் , பொறியாளர் அணி மாநில துணைச் செயலாளர் அன்பழகன் முன்னிலையில், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், நிர்மல் குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மாவட்ட அணி நிர்வாகிகள் அந்தோணி ஸ்டாலின், குபேர் இளம்பரிதி, கவிதா தேவி, அருண்குமார், பழனி, மாநகர துணை செயலாளர்கள் கீத முருகேசன், பிரவீனா, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வகுமார், பொதுக்குழு உறுப்பினர் கோட்ராஜா, மாநகர அணி நிா்வாகிகள் முருக இசக்கி, ஜீவன் ஜேக்கப், ஜெயக்கனி, கிறிஸ்டோபர் விஜயராஜ், ஐடி விங் நிர்வாகிகள் பிரபு, நாகராஜன், அருணா தேவி, அண்ணாதுரை, அஸ்வின், இளைஞர் அணி ஐ.ரவி, டினோ, மாமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், சரவணகுமார், அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், பச்சிராஜ், மரிய கீதா, ஜான்சி ராணி, நாகேஸ்வரி, ஜான் சீனிவாசன், கண்ணன், தேவேந்திரன், மகேஸ்வரி, வட்டச் செயலாளர்கள் கங்கா ராஜேஷ், சிங்கராஜ், பாலகுருசாமி, செல்வராஜ், டென்சிங், மூக்கையா, அனல் சக்திவேல், கருப்பசாமி, சதீஷ்குமார், செந்தில்குமார், சுரேஷ் மகாராஜன், மற்றும் சி.எஸ்.முரளிதரன், ரூபராஜா, கிங் பாலா, விக்னேஷ், பெனிஸ்டஸ், நாராயணசாமி, பிரதிநிதிகள் பாஸ்கர், ஜேசு பாலன், ரஜினி முருகன், அறங்காவலர் செந்தில்குமார், மணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு புகழ் வணக்கம் செலுத்தினர்.
