செய்திகள்தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாடு என்றாலே சாதனை! இரட்டை இலக்க வளர்ச்சி! முதல்வர் பெருமிதம்

Share the news

திமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாடு இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ள பதிவில்;
இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி சாதனையை குறிப்பிட்டு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு என்றாலே சாதனை! சாதனை! சாதனை! திராவிட மாடல் தனித்துவமான மாடல் சொன்னதை, எண்களிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். திராவிட மாடல் ஆட்சியில் முதல் மூன்றாண்டுகளில் அடித்தளம் அமைத்து, இப்போது தொடர்ந்து இரண்டாண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளோம். சிறப்பான நமது நிர்வாகத்திற்கு, உழைப்பால் துணை நின்ற தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி!

இது தொடக்கம்தான். உங்கள் துணையோடு இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி!
நம்முடைய போட்டி என்பது மற்ற இந்திய மாநிலங்களுடன் அல்ல; தெற்காசியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உயர வேண்டும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் பதிவு செய்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன