அண்மை செய்திகள்செய்திகள்

திருச்செந்தூரில் தவெக தலைவர் விஜய் யாகம் நடத்தி வழிபாடு செய்தார்.

Share the news

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், முருகனின் அறுபடை வீடுகளில் பிரசித்திப் பெற்ற திருத்தலமாகும். திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்யும் ஆன்மிக ஸ்தலமாக விளங்கி வருகிறது.

இந்நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் மற்றும் நடிகரான விஜய் இன்று அதிகாலை கோவிலுக்கு வருகை தந்து, குகை சன்னதியில் “சத்ரு சம்ஹார யாகம்” நடத்தினார். அரசியல் மற்றும் தொழில் துறையில் உள்ளவர்களிடையே இந்த யாகம் நடத்துவது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது.

சக்திவாய்ந்த “சத்ரு சம்ஹார யாகம்” என்பது தனது போட்டியாளர்கள், வழக்கு உள்ளிட்ட சிக்கல்கள் மற்றும் மன உறுதி, வெற்றியை வழங்கும் சக்திவாய்ந்த யாகமாக கருதப்படுகிறது. இதனால் பல நன்மைகள் கிடைக்கும் என முருக பக்தர்கள் நம்புகின்றனர்.

இந்த நிலையில் தான் தவெக தலைவர் நடிகர் விஜய் இந்த யாகத்தை நடத்தியுள்ளார். தொடர்ந்து, விஜய் மூலவர் சுப்பிரமணியர் சன்னதியில் தரையில் அமர்ந்து தீவிரமாக பிரார்த்தனை செய்தார். தொடர்ந்து சண்முகர், வள்ளி, தெய்வானை, தட்சிணாமூர்த்தி, பெருமாள் மற்றும் சூரசம்கார மூர்த்தி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் தரிசனம் மேற்கொண்டார்.

இத்தகைய யாகங்கள் அரசியல் எதிரிகளை வெல்வதற்கு உதவும் என்ற நம்பிக்கை காணப்படுகிறது. இதனால், விஜய் மேற்கொண்ட இந்த சத்ரு சம்ஹார யாகம் அவரது அரசியல் பயணத்தில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும், அரசியல்வாதிகள் மத்தியிலும் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றது.

தவெக தலைவர் விஜயின் இந்த ஆன்மிக நடவடிக்கை அவரது அரசியல் எதிர்காலத்தில் எந்த மாதிரியான மாற்றத்தை கொண்டு வரும் என தமிழக அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன