விஜயகாந்த் பிறந்த நாள் தூத்துக்குடியில் தேமுதிகவினர் நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட்டம்
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்த நாள் விழா, தூத்துக்குடியில் தேமுதிகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
தூத்துக்குடி:
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் ‘கேப்டன்’ விஜயகாந்தின் 74-வது பிறந்த நாள் விழா தூத்துக்குடி மாவட்டத்தில் தேமுதிக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
மாவட்டக் கழகச் செயலாளர் தயாளலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், தூத்துக்குடி நகரின் பல்வேறு பகுதிகளில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
36 வது வார்டு போல்டன்புரத்தில் மாவட்ட துணைச் செயலாளர் லிவிங்ஸ்டன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு இலவச அரிசிப் பைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. அண்ணா நகரில், பகுதிச் செயலாளர் வல்லரசு துரை ஏற்பாட்டில் வேட்டி, சேலை, அரிசிப் பைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இரண்டாம் கேட் பகுதியில், பகுதிச் செயலாளர் நாராயண மூர்த்தி ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முத்தையாபுரத்தில் அந்தோணி ராஜ், கட்டபொம்மன் நகரில் அரசமுத்து ஆகியோர் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மேலும், புதுப்பட்டி மற்றும் செட்டிமல்லம்பட்டி கிராமங்களில் தேமுதிக கொடியேற்றப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிகளில் மாவட்ட அவைத் தலைவர் அலெக்சாண்டர், மாவட்ட துணைச் செயலாளர்கள் மாலதி, நாராயண மூர்த்தி, ராமகிருஷ்ணன், சம்சுதீன், செயற்குழு உறுப்பினர்கள் ராஜ பொம்மு, மந்திர மூர்த்தி, ஒன்றியச் செயலாளர்கள் ஜெயக்குமார் (ஒட்டப்பிடாரம்), விக்னேஷ் (தூத்துக்குடி), கணேச முருகன் (கருங்குளம்), பொதுக்குழு உறுப்பினர்கள் சின்னத்துரை, கோபாலகிருஷ்ணன், செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் மாவட்ட தொழிற்சங்க நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப அணி, இளைஞர் அணி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட தேமுதிக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டு
கேப்டன் விஜயகாந்தின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
