செய்திகள்அண்மை செய்திகள்

தூத்துக்குடியில் சௌந்தரபாண்டியனார் பிறந்தநாளில் பத்திரிகையாளர்களுக்கு விருது

Share the news

W.P.A.சௌந்தரபாண்டியனார் பிறந்தநாளில், தூத்துக்குடி பத்திரிகையாளர் – எழுத்தாளருக்கு, மாபொசி கலை இலக்கிய மன்றம் சார்பில் விருது.

தூத்துக்குடியில், இலக்கியச் செல்வர் மா.பொ.சி. கலை இலக்கிய மன்றம் சார்பில், சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பு அலுவலகத்தில் W.P.A. சௌந்தரபாண்டியனாரின் 134வது பிறந்தநாள் விழா மற்றும் விருது வழங்கும் விழா விமரிசையாக நடைபெற்றது.
​இலக்கியச் செல்வர் மா.பொ.சி. கலை இலக்கிய மன்றத் தலைவர் லாரன்ஸ் தலைமை தாங்கினார். விழாவில், தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத் தலைவர் சண்முகசுந்தரம், தூத்துக்குடி மூத்த செய்தியாளர் குமாரவேலுக்கு ‘பாண்டியனார் வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கவுரவித்தார்.
​தொடர்ந்து, மாணவ-மாணவிகளிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தி வரும் புத்தக வாசிப்பு மன்றத் தலைவரும், எழுத்தாளருமான ஆ.மாரிமுத்து அவர்களுக்கு ‘பாண்டியனார் விருது’ வழங்கி சிறப்புரையாற்றப்பட்டது.
​விழாவில், நெடுஞ்சாலைக் கவிஞர் செல்வராஜ் பங்கேற்று விருது பெற்ற இருவரையும் வாழ்த்திப் பேசினார். அதனைத் தொடர்ந்து, விருது பெற்ற மூத்த செய்தியாளர் குமாரவேல் மற்றும் எழுத்தாளர் ஆ.மாரிமுத்து ஆகியோர் ஏற்புரை நிகழ்த்தினர்.
​இந்நிகழ்வின் இறுதியில், இலக்கியச் செல்வர் மா.பொ.சி. கலை இலக்கிய மன்ற அமைப்பாளர் ரவி நன்றியுரையாற்றினார். இவ்விழாவில் அரசு ஓய்வுபெற்ற அலுவலர் செரீப், சமூக ஆர்வலர் ஜனார்த்தனன் டேவிட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன