செய்திகள்அண்மை செய்திகள்

சிவாஜி கணேசன் பிறந்தநாளில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி மரியாதை செலுத்தினார்

Share the news

தூத்துக்குடியில் சிவாஜி கணேசன் பிறந்தநாளை முன்னிட்டு மாப்பிள்ளையூரணியில் சிவாஜி திருவுருவ படத்திற்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி மரியாதை செலுத்தினார்

தூத்துக்குடி
பெருந்தலைவர் காமராஜரின் தொண்டரும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 98 வது பிறந்தநாள் விழா மாப்பிள்ளையூரணியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
​விழாவிற்குத் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள்சாமி தலைமை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுடலையாண்டி முன்னிலை வகித்தார்.
​நிகழ்ச்சியில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிவாஜி கணேசனின் திருவுருவப் படத்திற்கு மாவட்ட தலைவர் பெருமாள்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
​இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த எட்வர்ட் ராஜ் மற்றும் பெத்துராஜ் ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.

இந்நிகழ்வில், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜான் பிரிட்டோ, மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா, நேரு காலனி ஆறுமுகம், அந்தோணி மிக்கேல், சங்கராம்மாள், தெய்வகனி அம்மாள் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் மற்றும் சிவாஜி கணேசன் ரசிகர்களும் பெருமளவில் கலந்து கொண்டு நடிகர் திலகத்தின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன