செய்திகள்அண்மை செய்திகள்

தூத்துக்குடி பாத்திமா நகர் பரிசுத்த பாத்திமா அன்னை பெருவிழா கோலாகல கொடியேற்றத்துடன் தொடக்கம்

Share the news

தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு மணல்மேடு பாத்திமா நகர் பரிசுத்த பாத்திமா அன்னை ஆலயப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம். செப்டம்பர் 13ல் பெருவிழாத் திருப்பலி நடைபெறுகிறது.

தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பாத்திமா நகர் (முன்னர் மணல்மேடு என அழைக்கப்பட்டது) பரிசுத்த பாத்திமா அன்னை ஆலயப் பெருவிழா, அக்டோபர் 3 சனிக்கிழமை காலை 7 மணிக்குக் கொடியேற்றத் திருப்பலியுடன் விமரிசையாகத் தொடங்கியது.
​இப்பெருவிழாத் திருப்பலிக்குத் தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு ரவி பாலன் தலைமை தாங்கினார். அருட்தந்தை ஜெய்கர் கலந்துகொண்டு இறை மக்களுக்காகச் சிறப்பு வேண்டுதல் செய்தார்.
​ஆலயப் பங்குத்தந்தை அருட்பணி. அந்தோணி சார்லஸ் திருவிழா நிகழ்வுகளை முன்னின்று நடத்தினார். அருட்சகோதரர் செல்வா பங்குத்தந்தையுடன் இணைந்து உதவிகளைச் செய்தார். திருவிழாவுக்கான ஏற்பாடுகளைப் பங்குத்தந்தையோடு இணைந்து, திருஇருதய அருட்சகோதரிகள், பங்குப் பேரவையினர், ஊர் நலக் கமிட்டியினர் மற்றும் பங்கு இறைமக்கள் இணைந்து சிறப்புடன் செய்து வருகின்றனர்.
​வருகிற 13-10-2026 செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு, தூத்துக்குடி மறைமாவட்ட மேதகு ஆயர் ஸ்டீபன் அந்தோணி ஆண்டகை தலைமையில் பெருவிழாத் திருப்பலி நடைபெற உள்ளது. அன்று மாலை 5:30 மணிக்கு அன்னையின் திருச்சப்பரப் பவனி நகர் வீதிகளில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

விழா திருப்பலி, ஜெப வழிபாடுகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஏராளமான இறைமக்கள் பங்கேற்க உள்ளனர். பரிசுத்த பாத்திமா அன்னையின் பெருவிழாவில் அனைவரும் கலந்து கொண்டு அன்னையின் ஆசீரைப் பெறுமாறு பங்குத்தந்தை அருட்பணி அந்தோணி சார்லஸ் அடிகளார் அழைப்பு விடுத்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன