செய்திகள்அண்மை செய்திகள்

தூத்துக்குடியில் பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு “போதையில்லா பாரதம்” விழிப்புணர்வு நிகழ்ச்சி

Share the news

தூத்துக்குடியில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘போதையில்லா பாரதத்தை உருவாக்குவோம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வேலூர் இப்ராஹிம் பங்கேற்பு

தூத்துக்குடி:
​பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘போதையில்லா பாரதத்தை உருவாக்குவோம்’ என்ற திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
​இதில், பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் சிறப்புப் அழைப்பாளராக பங்கேற்றார்.
தூத்துக்குடி டிஎம்பி காலனி பகுதியில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். அப்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதன் அவசியம் குறித்து அவர் பேசினார்.
தொடர்ந்து, தெற்கு காட்டன் சாலையில் உள்ள அங்கன்வாடி மையத்திற்குச் சென்று, அங்குள்ள குழந்தைகளுடன் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளைக் கொண்டாடினார். மேலும், குழந்தைகளுக்குப் பழங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, திருச்செந்தூர் சாலையில் உள்ள காமராஜர் கல்லூரிக்குச் சென்ற வேலூர் இப்ராஹிம், மாணவ, மாணவிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார். போதைப் பொருட்களின் தீமைகள், மாணவர்கள் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகாமல் தடுப்பது மற்றும் போதை இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து அவர் மாணவர்களுடன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
தூத்துக்குடி தெற்கு மற்றும் வடக்கு ரத வீதிகள் சந்திக்கும் சிவன் கோவில் தேரடிப் பகுதியில், ‘போதையில்லா பாரதத்தை உருவாக்குவோம்’ என்ற விழிப்புணர்வு பிரசாரத்திலும் வேலூர் இப்ராஹிம் பங்கேற்றார்.

​இந்நிகழ்ச்சிகளில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ், தெற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் ஏ.எம். ராஜேஷ், மாவட்ட துணைத் தலைவர்கள் சண்முகசுந்தரம், மசானம், சிவராமன், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் கலைச்செல்வன் உள்ளிட்ட பல்வேறு அணி மற்றும் பிரிவுச் செயலாளர்களும், கட்சித் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
​பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை சமூக நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் இணைத்து நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சிகள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த கவனம் பெற்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன