முதல்வர் விஜயின் ஆணவப் போக்கு, முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கண்டனம்
தமிழ்நாடு சட்டப்பேரவையின் மாண்பை, மரபை, வரலாறை கொச்சைப்படுத்தும் முதல்வர் விஜயின் ஆணவப் போக்குக்கு – முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கடும் கண்டனம்
தூத்துக்குடி,
தமிழக சட்டப் பேரவையில் முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர்கள் கலைஞர், மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறான கருத்துக்களை பேசியதை கண்டித்து தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.வி.மார்கண்டேயன், கா.கருணாநிதி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்:
தமிழ்நாட்டில் நீண்டகாலம் முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் திமுக தலைவர் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தியாகத்தையும், ஆட்சி பணிகளையும் முதல்வர் விஜய் கொச்சைப்படுத்தி கேலி பேசுவது கண்டனத்திற்குரியது.
சட்டமன்றத்தின் மாண்பு, வரலாறு, மரியாதை என அனைத்தும் முதல்வர் விஜய்யின் செயல்பாடுகளால் காற்றில் பறக்கின்றன. அவரது பேச்சில் முழுக்க ஆணவப் போக்கு வெளிப்படுகிறது. பேரவையின் நடவடிக்கைகள் அருவருக்கத்தக்க, நாகரிகமற்ற முறையில் மாற்றப்பட்டுள்ளன. தமிழகத்தின் இன்றைய வளர்ச்சிக்கு முன்னாள் முதலமைச்சர்கள் கலைஞர், மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக அரசின் பங்களிப்பு முக்கிய காரணமாகும்.
திமுகவின் உழைப்பையும் தியாகத்தையும் மறைத்து, வரலாற்றைத் திரித்து, முதல்வருக்கு முட்டுகொடுக்கும் மூன்று அமைச்சர்களும், தவெக சட்டமன்ற உறுப்பினர்களும் பேரவையில் பொய்யான தகவல்களைப் பேசி மக்களைத் திசைதிருப்பி வருகின்றனர். தமிழகத்தில் இப்படிப்பட்ட ஒருவரைத் தேர்ந்தெடுத்து விட்டோமே என்று மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். யாரோ எழுதிக் கொடுக்கும் ஸ்கிரிப்ட்டை வாசிக்கும் “ரீல்ஸ் மாடல்” ஆட்சியாளர்கள் தங்களது ஆணவப் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். என முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கண்டனம் தெரிவித்தார்.
முன்னதாக, சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாநில அணி நிர்வாகிகள் அன்பழகன், உமரி சங்கர், மாவட்ட துணைச் செயலாளர்கள் வடக்கு ராஜ்மோகன் செல்வின், தெற்கு ஜெயக்குமார் ரூபன், ஜெபத்தங்கம், மாவட்ட அவைத் தலைவர்கள் வடக்கு செல்வராஜ், தெற்கு அருணாச்சலம், பொருளாளர் சுசி ரவீந்திரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் மதியழகன், பை.மூ.ராமஜெயம், துணை மேயர் செ.ஜெனிட்டா, மண்டலத் தலைவர் பாலகுருசாமி, தலைமைக் கழகப் பேச்சாளர்கள் சரத் பாலா, பிரியன், ஒன்றியச் செயலாளர்கள் காசி விஸ்வநாதன், இம்மானுவேல், மும்மூர்த்தி, ராதாகிருஷ்ணன், செல்வராஜ், ராமசுப்பு, அன்புராஜன், நவநீத கண்ணன், முருகேசன், சின்னபாண்டியன், கேகேஆர்.ஜெயக்கொடி, சரவணக்குமார், இளையராஜா, செங்குளி ரமேஷ், கோட்டாளம், நவீன்குமார், சுப்ரமணியன், பேரூர் கழகச் செயலாளர்கள் வேலுச்சாமி, பாரதி கணேசன், கோபிநாத், திருச்செந்தூர் நகரச் செயலாளர் வாள் சுடலை, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மேகநாதன், சுரேஷ்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜாகண்ணு, கஸ்தூரி தங்கம், ராஜா மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் கவிதாதேவி, ஜான்சன், டி.டி.சி.ராஜேந்திரன், பொன்பாண்டி ரவி, பால்துரை, அருண்குமார், ராமர், ஐடிவிங் பிரபு, அருணாதேவி, நாகராஜன், அண்ணாதுரை, அஸ்வின் மற்றும் இளைஞர் அணி அருண்சுந்தர், ஐ.ரவி, சங்கரநாராயணன், செல்வின், மாணவரணி வினோத், அயலக அணி கிறிஸ்டோபர் விஜயராஜ், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், கலை இலக்கிய அணி பொன்னரசு, பிக்கப் தனபால் மற்றும் வட்டச் செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பகுதி மற்றும் வட்டப் பிரதிநிதிகள் உள்பட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.
