செய்திகள்அண்மை செய்திகள்

பாரதியார் – இம்மானுவேல் சேகரன் நினைவு தினம். முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை

Share the news

மகாகவி பாரதியார் மற்றும் தியாகி இம்மானுவேல் சேகரன் ஆகியோரது நினைவு தினம் தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் தலைமையில் அனுசரிக்கப்பட்டது.

தூத்துக்குடி,
​மகாகவி பாரதியாரின் 105-வது நினைவு தினம் மற்றும் தியாகி இம்மானுவேல் சேகரனின் 69-வது நினைவு தினம் தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் அனுசரிக்கப்பட்டது.
​மாவட்டக் கழக அலுவலகம் கலைஞர் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கி, இரு தலைவர்களின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

​நிகழ்ச்சியில் ​மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ​மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், ​துணை மேயர் செ.ஜெனிட்டா, ​மண்டலத் தலைவர் பாலகுருசாமி, மாவட்ட அணி நிர்வாகிகள் மீனவரணி அந்தோணி ஸ்டாலின், மகளிரணி கவிதா தேவி, மாணவரணி சின்னதுரை, மருத்துவர் அணி அருண்குமார், ஐடி விங் பிரபு, அருணா தேவி நாகராஜன், மாநகர துணை செயலாளர் கீதா முருகேசன், கனகராஜ், மற்றும் சி.எஸ்.முரளிதரன், மாநகர அணி நிர்வாகிகள் முருக இசக்கி, ஜெயக்கனி, சாரதி, பரமசிவன், ஐடி விங் அண்ணாதுரை, சுரேஷ்குமார், ராமச்சந்திரன், வினோத், ரூபராஜா, கவுன்சிலர்கள் கண்ணன், விஜயகுமார், சரவணக்குமார், ஜெயசீலி, பவானி, வைதேகி, சந்திரபோஸ், மார்ஷலின், மகேஸ்வரி, மரியகீதா, இசக்கி ராஜா, வட்டச் செயலாளர்கள் பாலகுருசாமி, கங்கா ராஜேஷ், மூக்கையா, சுப்பையா, கருப்பசாமி, டென்சிங், சக்திவேல், செந்தில்குமார், வட்டப் பிரதிநிதிகள் பாஸ்கர், ஜேசு பாலன் உட்பட ஏராளமானோர் பங்கேற்று மலரஞ்சலி செலுத்தினர்.

தமிழ் மொழியின் மறுமலர்ச்சிக்கும், சமூக நீதிக்கும் வித்திட்ட மகாகவி பாரதியாரையும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடிய தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவை போற்றும் வகையில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன