செய்திகள்அண்மை செய்திகள்

தூத்துக்குடியில் பாஜக சார்பில் ‘சேவா ஜோதி’ பேரணி தேசியக்கொடி, பாஜக கொடிகளுடன் பங்கேற்றனர்

Share the news

தூத்துக்குடியில் பிரதமர் மோடியின் 25 ஆண்டுகாலப் பொதுவாழ்வைச் சிறப்பிக்கும் வகையில் ‘சேவா ஜோதி’ பேரணி! தேசியக்கொடி, பாஜக கொடிகளுடன் பாஜகவினர் அணிவகுப்பு.

தூத்துக்குடி:
​பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகாலப் பொதுவாழ்வைக் கொண்டாடும் வகையிலும், அதனை நினைவுகூரும் வகையிலும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாடு முழுவதும் ‘சேவா ஜோதி’ பேரணி நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடியில் அக்டோபர் 7-ஆம் தேதி இப்பேரணி எழுச்சியுடன் தூத்துக்குடியில் நடைபெற்றது. சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தத்தில் துவங்கி, விவிடி ரோடு வழியாக டூவிபுரத்தில் நிறைவு பெற்றது.

பேரணியில் ​பாஜக தேசிய செயலாளர் மா.வெங்கடேசன், மீனவர் அணி மாநிலத் தலைவர் சீமா பாலு, தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் சித்ராங்கதன், வடக்கு மாவட்டத் தலைவர் சரவண கிருஷ்ணன் அணிவகுத்து வர,
இளைஞர் அணி மாவட்டத் தலைவர் சக்திவேல் தீபத்தை ஏந்தி வந்தார். நிகழ்ச்சியில் தேசியக் கொடிகளும், பாஜக கொடிகளும் ஏந்திச் செல்லப்பட்டன. மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் பொதுவாழ்வுப் பயணத்தை விளக்கும் பதாகைகளும் இடம்பெற்றன.
​
​பிரதமர் நரேந்திர மோடியின் பொதுவாழ்வுப் பயணத்தை நினைவுகூர்வதுடன், மக்கள் நலன் மற்றும் சமூக சேவை தொடர்பான கருத்துகளை பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் இப்பேரணி நடத்தப்பட்டதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
​இந்தியாவின் சுதந்திர நூற்றாண்டான 2047-க்குள் நாட்டை வளர்ச்சியடைந்த இந்தியாவாக (Viksit Bharat) மாற்றுவதற்கான முயற்சிகளில் பொதுமக்கள் அனைவரும் தீவிரமாகப் பங்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் இப்பேரணியில் வலியுறுத்தப்பட்டது.
​

​இப்பேரணியில் மாவட்டப் பொதுச் செயலாளர்கள் ஏ.எம். ராஜேஷ், ஆறுமுகம், செல்வராஜ் மற்றும் மாவட்ட துணைத் தலைவர்கள் சிவராமன், இசக்கிமுத்து, காளிராஜா, மாசானம், சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
​மேலும், வடக்கு மாவட்டப் பொதுச் செயலாளர் வீரா மற்றும் பல்வேறு அணிகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கட்சித் தொண்டர்களும் பேரணியில் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன