செய்திகள்அண்மை செய்திகள்

தூத்துக்குடியில் வங்கியாளர்கள் ஆலோசனைக் கூட்டம்: இலக்கை எட்டிய வங்கிகளுக்கு ஆட்சியர் பாராட்டு

Share the news

தூத்துக்குடியில் வங்கியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் விஷு மகாஜன், கடனுதவிகளில் நூறு சதவீத இலக்கை எட்டிய வங்கிகளுக்குப் பாராட்டி பரிசுகள் வழங்கி இன்னும் சிறப்பாக செயல்பட ஆலோசனைகள் வழங்கினார்.

தூத்துக்குடி:
​தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வங்கியாளர்களுக்கான மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.
​இக்கூட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடனுதவிகள், தாட்கோ (TAHDCO) மூலம் வழங்கப்படும் மானியக் கடன்கள், மாவட்ட தொழில் மையம் சார்பில் செயல்படுத்தப்படும் 7 வகையான மானியக் கடன் திட்டங்கள் மற்றும் மாவட்ட சுயதொழில் பயிற்சி மையத்தின் (RSETI) செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
​அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டக் கடனுதவிகள் தகுதியான பொதுமக்கள் மற்றும் மாணவர்களை முழுமையாகச் சென்றடையும் வகையில், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை விரைந்து எய்திட வேண்டும் என வங்கி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
​முன்னதாக, கடந்த நிதியாண்டில் கல்வி, வேளாண்மை, எரிசக்தி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடனுதவிகளில் நூறு சதவீத இலக்கை எட்டிய வங்கிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வழங்கி பாராட்டினார்.

​இந்நிகழ்வில் பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் மகேஷ்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விநாயகமூர்த்தி, மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் புனித ரெமேலா, நபார்டு வங்கி மேலாளர் சதாம் உசைன், மாவட்ட தொழில் மைய இணை இயக்குநர் மற்றும் பொது மேலாளர் ஸ்வர்ணலதா உள்ளிட்ட பல்வேறு வங்கிகளின் உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன