தூத்துக்குடி ரோட்டரி ட்ரெயில்ப்ளேசர்ஸ் சார்பில் பசுமைச் சூழல் விழிப்புணர்வு கார் பேரணி
தூத்துக்குடியில் பசுமைச் சூழல் விழிப்புணர்வை வலியுறுத்தி ரோட்டரி கிளப் ஆஃப் தூத்துக்குடி ட்ரெயில்ப்ளேசர்ஸ் சார்பில் நடைபெற்ற கார் பேரணியை மாநகராட்சி ஆணையர் எஸ்.ப்ரியங்கா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமைச் சூழல் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில், ரோட்டரி மாவட்டம் 3212
ரோட்டரி கிளப் ஆஃப் தூத்துக்குடி ட்ரெயில்ப்ளேசர்ஸ் சார்பில் தூத்துக்குடியில் கார் பேரணி நடைபெற்றது. ரோட்டரி மாவட்ட ஆளுநர் காந்தி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியை, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் எஸ்.பிரியங்கா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ரோட்டரி கிளப் ஆஃப் தூத்துக்குடி ட்ரெயில்ப்ளேசர்ஸ் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சங்க தலைவர் எம்.திவ்யா பிரைட்லின், தலைமை வகித்தார். செயலாளர் டாக்டர் ரஜினி டாட்டியா, பொருளாளர் ராஜீவி மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஸ்வர்ணலதா, மாநகராட்சி சுகாதார அலுவலர் ஹரி கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பேரணியில் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி – ஆராய்ச்சி நிலைய சுற்றுச்சூழல் மன்றம் மாணவர்கள், ரோட்டரி உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இயற்கை வளங்களைப் பாதுகாப்பது, மரங்களை வளர்ப்பது மற்றும் பசுமைச் சூழலின் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு வாசகங்களுடன் கார்கள் ஊர்வலமாகச் சென்றன.
“பசுமையை பாதுகாப்போம் – எதிர்காலத்தை வளமாக்குவோம்” என்ற நோக்கத்தை வலியுறுத்தி இப்பேரணியின் செயல்பாடுகள் தூத்துக்குடி , திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நடைபெறுகிறது.
இந்நிகழ்வு பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. நிகழ்வின் போது மாநகராட்சியில் செயல்படுத்தி வரும் பசுமை வளர்ச்சித் திட்டங்களை பாராட்டி ஆணையர் எஸ்.ப்ரியங்கா’வுக்கு பாராட்டு சான்றிதழை சங்க தலைவர் எம்.திவ்யா பிரைட்லின் வழங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் விதை பந்துகள் வழங்கப்பட்டது.
