செய்திகள்அண்மை செய்திகள்

மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வெற்றி தூத்துக்குடியில் தவெகவினர் கொண்டாட்டம்

Share the news

மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக. வெற்றி பெற்றதையடுத்து தூத்துக்குடியில் துணை பொதுச் செயலாளர் எஸ்டிஆர்.சாமுவேல் ராஜ் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

தூத்துக்குடி,
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாயின.
இந்த இரண்டு தொகுதிகளையும் அ.தி.மு.க.-விடமிருந்து தமிழக வெற்றிக் கழகம் கைப்பற்றியது. இத்தொகுதிகளில் போட்டியிட்ட த.வெ.க. வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
​
இதனையடுத்து த.வெ.க. தலைவர் விஜய், பொதுச்செயலாளர் அமைச்சர் ஆனந்த் ஆகியோரின் உத்தரவின்பேரில், தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆலோசனையின்பேரில், தூத்துக்குடி பழைய பஸ் ஸ்டாண்டில் த.வெ.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல் ராஜ் தலைமையில் பட்டாசு வெடித்தும், பயணிகள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.
​இதில் மாவட்ட பொருளாளர் சிவகுமார், மாவட்ட துணைச் செயலாளர் சுரேஷ், செயற்குழு உறுப்பினர்கள் ஜோசப் ஆனந்த், சதீஸ், இளைஞரணி செயலாளர் விஜய் சுபாகர், மற்றும் ஏராளமான தவெக நிர்வாகிகள், பகுதி, வட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன