செய்திகள்அண்மை செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் அறிவிப்பு: அக்-6 வாக்குப்பதிவு!

Share the news

மதுராந்தகம் – தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6ல் இடைத்தேர்தல் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ​தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு அதிமுக கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்ததைத் தொடர்ந்து, இத்தொகுதிகளில் இடைத்தேர்தல் அவசியமாகியுள்ளது. ​
மேலும், முதலமைச்சர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டதன் அடிப்படையில், பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார். இதன் காரணமாக தமிழகத்தில் மொத்தம் 7 தொகுதிகள் காலியாகின. ​எனினும், மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், தற்போது முதற்கட்டமாக மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவி விலகலும் காலியான தொகுதிகளும்; ‌‌. அதிமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் தங்கள் சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்தனர். இவர்களைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர்) ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்து தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இடைத்தேர்தலுக்கான முக்கிய தேதிகள் :-
வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள்: செப்டம்பர் 9
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்: செப்டம்பர் 16
வேட்புமனு மீதான பரிசீலனை: செப்டம்பர் 17
வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள்: செப்டம்பர் 19
வாக்குப்பதிவு நாள்: அக்டோபர் 6
வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரப் பணிகளைத் தொடங்கத் தயாராகி வருகின்றன.
​இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன