முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சசிகலா ஆதரவாளர்கள்
தூத்துக்குடியில் அரசியல் மாற்றம்! கூண்டோடு அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்ட சசிகலா ஆதரவாளர்கள்! அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்
தூத்துக்குடி:
அனைத்திந்திய புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி தொண்டர்கள் உரிமைக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட வி.கே. சசிகலா ஆதரவாளர்கள், அக்கட்சியிலிருந்து கூண்டோடு விலகித் தாய்க் கழகமான அதிமுகவில் இணைந்தனர்.
தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள அதிமுக மாவட்ட கழக அலுவலகத்தில், மாவட்ட செயலாளர் ஏசாதுரை தலைமையில் இந்த இணைப்பு விழா நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமியின் தலைமையேற்று, கழக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் முன்னிலையில் இவர்கள் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
இணைந்தவர்கள் விவரம்:
மாவட்ட செயலாளர் ஏசாதுரை மற்றும் வி.கே. சசிகலா ஆதரவாளர்களான செல்வராஜ், பட்டுக்கனி, சாந்தி, ரெஜினா, ஜான்சி ராணி, சுப்புலட்சுமி, பொயாளி பாண்டியன், மாரியப்பன், ஆறுமுகத்துரை, ராஜதுரை, இல. ஜெயராமன், ஜெயபால், வேல்சாமி, பரணி செல்வம், தங்க இசக்கி ராஜா, முத்துமாலைசெல்வராஜ், சபிக்குமார் மகாராஜன், ரமேஷ், எம்.ஜி.ஆர் கணேசன், கணேசன் உள்ளிட்ட பலரும் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வின் போது கழக அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணைச்செயலாளர் பெருமாள் சாமி, விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் பிரபு, தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதி கழக செயலாளர் ஜெய்கணேஷ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ், அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் ஆனந்தராஜ், மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர்கள் முத்துக்கனி, நவ்சாத், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் மெஜூலா, சந்திரா மற்றும் ராஜு, பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜ், சொக்கலிங்கம், எம்.டி ராஜா உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
