உள்ளூர் செய்திகள்செய்திகள்

டெல்லி அணியை வீழ்த்திய தமிழ்நாடு ஸ்குவாஷ் அணி

Share the news

தேசிய அளவிலான ஸ்குவாஷ் போட்டியில் தூத்துக்குடி செயின்ட் தாமஸ் பள்ளி மாணவன் தர்ஷன் தலைமையில் சாம்பியன் பட்டத்தை வென்று மாபெரும் சாதனை!

டெல்லியில் பள்ளிகளுக்கிடையே 20ம் தேதி நடைபெற்ற 69 வது தேசிய அளவிலான ஸ்குவாஷ் பந்தயப் போட்டியில், 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மாநில அளவில் பல அணிகள் கலந்து கொண்டு சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற போராடியது. இதில் தூத்துக்குடி செயின்ட் தாமஸ் பள்ளி மாணவன் தர்ஷன் தலைமையிலான தமிழ்நாடு அணி இறுதி போட்டிக்கு தயாரானது. இறுதி போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து தமிழ்நாடு அணி மோதிக் கொண்டது. இதில் தர்ஷன் தலைமையிலான தமிழ்நாடு அணி டெல்லி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் வெண்கலம் வென்று சாதனை.

பரபரப்பாக நடந்த இதே போட்டியில் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் விளையாடிய‌ தூத்துக்குடி செயின்ட் தாமஸ் பள்ளி மாணவன்‌ ஹரிபாலா தலைமையிலான தமிழ்நாடு அணி, IPSSO அணியை இறுதிப்போட்டியில் வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றது. இந்த மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாடு அணி பயிற்சியாளர்கள் மற்றும் செயின்ட் தாமஸ் பள்ளி ஸ்குவாஷ் பயிற்சியாளர்களுக்கும், பெற்றோர்கள் விளையாட்டு ஆர்வலர்கள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.மேலும் இந்த வெற்றியை ஸ்குவாஷ் ரசிகர்கள் ஆரவாரத்துடன் வாழ்த்தி வரவேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன