தொகுதி மறுவரையறை தோல்வி! முதல்வர் ஸ்டாலின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி, அமைச்சர் கீதாஜீவன் இனிப்பு வழங்கி உற்சாகம்.
தூத்துக்குடி,
ஒன்றிய பாரதிய ஜனதா அரசு பாராளுமன்றத்தில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் உரிமைகளை பறிக்கும் வகையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்ற பெயரில் தொகுதி மறுவரை செய்வதற்கான மசோதா உள்ளிட்ட மசோதாக்களை தாக்கல் செய்தது இந்த மசோதாக்கள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை என்ற நிலையில் திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்பால் இந்த மசோதா தோல்வி அடைந்தது
இதைத்தொடர்ந்து நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்த முதல் தோல்வி தமிழகத்தின் உரிமை மீட்கப்பட்டுள்ளது என தெரிவித்து நேற்று திண்டுக்கல்லில் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினார்
இதனையடுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரும் அமைச்சருமான கீதா ஜீவன் தலைமையில் திமுகவினர் கலைஞர் அரங்கம் முன்பு ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி அடைந்ததை கொண்டாடும் வகையில் தமிழக முதல்வர் பெற்றுத் தந்த வெற்றிக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்த மசோதா தோல்வி என்பது தமிழக முதல்வருக்கு கிடைத்த வெற்றி பிரதமர் மோடிக்கு கிடைத்த முதல் தோல்வி தமிழ்நாடு மாநில உரிமையை விட்டுக் கொடுக்காது தொடர்ந்து “தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்” என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
இதில் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், காங்கிரஸ், தேமுதிக, விசிக, மநீம, மநேம மற்றும் கூட்டணிக் கட்சியினர், திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர், மகளிர் அணியினர், வழக்கறிஞர் அணியினர், வட்டச் செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பிரதிநிதிகள், சார்பு அணியினர் கலந்து கொண்டு தமிழக முதல்வருக்கு வெற்றி வெற்றி என கோஷங்களுடன் உற்சாக குரல் எழுப்பினர்.
