செய்திகள்உள்ளூர் செய்திகள்

மாநகராட்சி பள்ளிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

Share the news

கோடைவிடுமுறை முடிந்து தூத்துக்குடியில் ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாநகராட்சி பள்ளிகளில் மேயர் ஜெகன் பொியசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஜின் பேக்டரி ரோடு மாநகராட்சி பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகளில் மேயர் ஜெகன் பொியசாமி, மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனா்.
பின்னா் மேயர் ஜெகன் பொியசாமி கூறுகையில்;
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மாநகராட்சி பகுதியில் எங்களது நிர்வாகத்தின் கீழ் 8 தொடக்க பள்ளிகள், 11 நடுநிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளி 1 என மொத்தம் 20 பள்ளி செயல்பட்டு வருகிறது. தேர்வுக்கு பின் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 4ம் தேதி வியாழக்கிழமை பள்ளி திறக்கப்படும் என்று தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன்படி எல்லா பள்ளிகளிலும் மாணவ மாணவிகள் நலன் கருதி பள்ளியில் உள்ள வகுப்பறைகள், தண்ணீர் தொட்டி, கழிவறை, விளையாட்டு மைதானம் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவைகளை முழுமையாக ஆய்வு செய்தோம். தேவையற்ற இடங்களில் இருக்கும் பழைய வேண்டாத பொருட்களையும் அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளோம். மாணவ மாணவிகளுக்கு சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிப்பறை வசதி சரியாக இருப்பதை கண்காணிக்க துறை அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்புகளும் தற்போதைய காலத்திற்கு ஏற்ப செய்து கொடுத்துள்ளோம் அதனால் கடந்த ஆண்டு முதல் மாநகராட்சி பள்ளிகளில் சேரும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை அதிகாித்துள்ளது. இரண்டு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று பலர் சாதனை படைத்துள்ளனர். அதே போல் திறனாய்வு தேர்வின் மூலமும் தேர்ச்சி பெற்றவர்களை கௌரவித்துள்ளோம். எதிர்கால தலைமுறையினாின் நலன் கருதி நல்ல பழக்க வழக்கங்களை சொல்லி கொடுத்து கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் தலைமை ஆசிாியர், ஆசிாியர்கள் நல்லமுறையில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது போல எனக்கு கல்வியும் மருத்துவமும் இரண்டு கண்கள் என்ற கருத்தின் அடிப்படையில் கல்விக்கென்று கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து எழுத்தறிவு படிப்பறிவு இல்லாதவர்கள் தமிழகத்தில் இல்லை என்ற நிலையை உருவாக்கியது போல் நாங்களும் மாநகராட்சி பகுதியில் உள்ள மாணவ மாணவிகள் நலன் கருதி அவர்களின் கற்றலுக்கு துணையாக இருந்து அனைத்து கட்டமைப்புகளை செய்து கொடுக்கிறோம். அனைத்து பள்ளிகளும் திறப்பதற்கு தயாராக உள்ளது மாநகராட்சி பகுதி பொதுமக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஒத்துழைப்பது போல நல்லமுறையில் செயல்படும் மாநகராட்சி பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்த்து பலனடைய வேண்டும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக தமிழ் ஆங்கில வழி கல்வி நல்லமுறையில் கற்பிக்கப்படுகிறது. இதை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி ஆலோசனை பேரில் 2021ம் ஆண்டு மாநகராட்சி பள்ளிகளில் 100 மாணவர்கள் தான் படித்து வந்த நிலையை மாற்றி தற்போது ஒவ்வொரு மாநகராட்சி பள்ளியிலும் 900 முதல் 1200 பேர் படித்து வருகின்றனர் இது முன்னாள் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான அரசின் மாபெரும் சாதனையாகும் சில பள்ளிகளில் புதிய வகுப்பறைகளும் கட்டப்பட இருப்பதாக மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்.

ஆய்வின் போது ஆணையாளர் ப்ரியங்கா, சுகாதார ஆய்வாளர் ஹாிகணேஷ், கவுன்சிலர் மும்தாஜ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், மேயரின் உதவியாளர் ரமேஷ். ஆணையரின் உதவியாளர் துரைமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன