Uncategorized

பனிமய மாதா ஆலய வளாக மேம்பாடு, மேயர் ஜெகனுக்கு பாராட்டு

Share the news

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழாவில் பந்தல் ஆசீர்வாத திருப்பலி நடைபெறும் மைதானத்தை மேம்படுத்தி தந்த மேயர் ஜெகன் பெரியசாமி’க்கு ஆலய அதிபர் பாராட்டு.

உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழா வருகிற 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பந்தல் ஆசீர்வாதத்தின் போது, ஆலயத்தின் எதிரே சிறப்பு நற்கருணை திருப்பலி நடைபெறும்.
​முன்னதாக, இப்பகுதியில் கற்களும் மணல்களும் நிறைந்திருந்ததோடு, மது பிரியர்கள் தொல்லையும் இருந்ததால் பக்தர்கள் அமர மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து பேராலய நிர்வாகத்தினர் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமியிடம் கோரிக்கை விடுத்தனர்.

மேயர் ஜெகன் பெரியசாமி உடனே நடவடிக்கை எடுத்தார். சுமார் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழைய துறைமுகம் முதல் பனிமய மாதா ஆலயம் வரை தார் சாலையும், சாலையின் இருபுறமும் மற்றும் நற்கருணை ஆசீர்வாதம் நடைபெறும் பகுதி முழுவதிலும் நவீன பேவர் பிளாக் கற்களும் பதிக்கப்பட்டு தளம் அழகுபடுத்தப்பட்டது.

​இதனையொட்டி நடைபெற்ற பாராட்டு விழாவில், மேயர் ஜெகன் பெரியசாமிக்கு ஆலய அதிபர் ஜான் செல்வம் சால்வை அணிவித்து, பனிமய மாதா நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினார்.
​விழாவில் ஆலய அதிபர் பேசியதாவது:
​”இந்த இடத்தை சீரமைக்கப் பலர் முயன்றும் வெற்றி பெறவில்லை. ஆனால், மேயர் ஜெகன் பெரியசாமி தம்மால் முடியும் என்று கூறி இதனைச் செய்து முடித்துள்ளார். முந்தைய மேயர்கள் யாரும் செய்யாத இந்த சிறப்பான உதவிக்காக நாம் என்றும் அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ​மேலும், கொடிமரம் மற்றும் தென்புறப் பகுதியில் பழுதடைந்துள்ள ஹைமாஸ் விளக்குகளை உடனடியாக எரிய வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேயர் உறுதியளித்தார்.

​இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைச் செயலாளர் அருட்தந்தை பிரதீபன், உதவி பங்குத்தந்தை ஜெரால்டு, கவுன்சிலர் ரிக்டா, களப்பணியாளர் மைக்சன், பாண்டியபதி பரதநல சங்கத் தலைவர் இன்னாசி, பொருளாளர் ஜான், மரியாவின் இயக்கம் மெரின்டோ, எடிசன், பெல்மேன், ஆக்னல், சேவியர் வாஸ், ரம்போலா, ஆர்தர் மச்சாது, பிரபாகர் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன