செய்திகள்அண்மை செய்திகள்

பனிமய மாதா பொருட்காட்சி, மேயர் ஜெகன் திறந்து வைத்தார்

Share the news

தூத்துக்குடியில் பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு OLS பொருட்காட்சியை மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்

உலகப் பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய மாதா பேராலய 444வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, OLS Friends சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட “Expo 2026” பிரம்மாண்ட பொருட்காட்சி, தூத்துக்குடி பெல் ஹோட்டல் அருகே உள்ள சவேரியானா மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியுள்ளது.

பொருட்காட்சியின் தலைமை அலுவலகத்தை பனிமய மாதா பேராலய அதிபர் அருட்தந்தை ஜான் செல்வம் மற்றும் புனித சவேரியானா இல்ல அதிபர் அருட்தந்தை சிங்கராயன் ஆகியோர் திறந்து வைத்தனர். முன்னதாக தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி OLS Friends Expo 2026 பொருட்காட்சியை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். நம்ம ஊர்த் திருவிழாவாக மக்கள் வேறுபாடுகள் மறந்து ஒற்றுமையுடன் கொண்டாடப்படும் இந்த திருவிழா வந்தவெகு சிறப்பு வாய்ந்ததாகும் மாதாவின் அருள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும். இந்த பொருட்காட்சி பொதுமக்களுக்கு வணிக மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் பயனுள்ளதாக இருக்கும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பேரருட்திரு பிரதீபன் லிபோன்ஸ், அருட்திரு அமல்ராஜ் அமிர்தநாதன், புனித சவேரியார் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் அருட்திரு அமல்ராஜ் அமிர்தநாதன், பொருட்காட்சி குழு சட்ட ஆலோசகர் செல்வின், திமுக மீனவரணி மாநில துணைச் செயலாளர் துறைமுகம் ப்ளோரன்ஸ், தொமுச மரியதாஸ், தொழிலாளர் நல அணி அமைப்பாளர் முருக இசக்கி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன