செய்திகள்அண்மை செய்திகள்

தூத்துக்குடியில் தொழிற்சங்கங்கள் சாலை மறியல் கைது

Share the news

தூத்துக்குடியில் மத்திய அரசை கண்டித்து ஐஎன்டியுசி, சிஐடியு, எச்எம்எஸ், ஏஐடியுசி, ஏஐசிசிடியு தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் சாலை மறியலில் ஈடுபட்டு கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் வாழ்வாதாரத்தின் மீதான தாக்குதல், தேர்வு மோசடிகளைக் கண்டித்தும், வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கோரியும் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு அனைத்துத் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பில் மத்திய அரசைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஐ.என்.டி.யு.சி. மாநிலச் செயல் தலைவர் பி.கதிர்வேல் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஐ.என்.டி.யு.சி. சார்பில் ராஜகோபால், மைக்கேல் வி.ராயன், சந்திரசேகர் மற்றும் பாலராஜ், சி.ஐ.டி.யு. சார்பில் முன்னாள் துறைமுகக் குழு உறுப்பினர் ரசல், பாலசுப்பிரமணியன், சிவபெருமாள், எச்.எம்.எஸ். சார்பில் மாவட்டத் தலைவர் ராஜலட்சுமி, துணைத் தலைவர் ராதா ஆனந்தராஜ், ராஜேஷ், சாதிக், ஏ.ஐ.சி.சி.டி.யு. சார்பில் சகாயம், சிவராமன், ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஞானசேகரன், மாநகராட்சி கவுன்சிலர் தனலட்சுமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் முத்து உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு, நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து மத்திய பாகம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் இப்போராட்டத்தில் ஈடுபட்ட 13 பெண்கள் உட்பட மொத்தம் 79 பேரை கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன