உள்ளூர் செய்திகள்அண்மை செய்திகள்செய்திகள்

ஸ்பிரிட்டட் யூத் 55வது ஆண்டு விழா: வெற்றி பெற்ற அணிக்கு கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் MP பரிசுகள் வழங்கினார்

Share the news

தூத்துக்குடி ஸ்பிரிட்டட் யூத் கால்பந்து கழகத்தின் 55-வது ஆண்டு விழா: வெற்றி பெற்ற வீரர்களுக்குப் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்பி, கோப்பைகள், பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்

தூத்துக்குடி:
தூத்துக்குடி ஸ்பிரிட்டட் யூத் ஃபுட்பால் கிளப்பின் (Spirited Youth Football Club) 55-வது ஆண்டு விழா இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் மற்றும் தொழில்துறை சங்க அரங்கில், விமரிசையாக நடைபெற்றது.
​இவ்விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த வீரர்களுக்கும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாநிலங்களவை உறுப்பினர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களையும், வெற்றிக் கோப்பைகளையும் வழங்கிப் பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்.
​அப்போது பேசிய அவர், இளைஞர்களின் நல்வாழ்விற்கும் உடல்திறன் மேம்பாட்டிற்கும் விளையாட்டு மிகவும் இன்றியமையாதது என்றும், தூத்துக்குடி மண்ணில் இருந்து தேசிய அளவிலான சிறந்த கால்பந்து வீரர்கள் உருவாக வேண்டும் என்றும் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்பி வாழ்த்தினார்.

​இந்நிகழ்ச்சிக்கு ஸ்பிரிட்டட் யூத் கால்பந்து கழகத் தலைவர் ஜெர்ரி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் மெரிண்டோ வில்லவராயர், செயலாளர் ரமேஷ், பொருளாளர் செல்வம், மூத்த நிர்வாகி பிரின்ஸ்டன் பிராங்கிளின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
​மேலும் இவ்விழாவில், மன்னர் பாண்டியாபதி பரதவர் நல தலைமைச் சங்கம்
பொதுச் செயலாளர் இன்னாசி, முத்துக்குளித்துறை பரதர் நலச் சங்கத் தலைவர் கனகராஜ், செயலாளர் ராஜ் உள்ளிட்ட பிரமுகர்கள், கால்பந்து கழகத்தின் மூத்த நிர்வாகிகள், வீரர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர். போட்டிகளில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் ஸ்பிரிட்டட் யூத் ஃபுட்பால் கிளப் நிர்வாகிகள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன