செய்திகள்அண்மை செய்திகள்

இயூமுலீக் கட்சியினர் திமுகவில் ஐக்கியம்: முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் வரவேற்பு

Share the news

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணை தலைவர் மற்றும் மாவட்ட துணை செயலாளர் தலைமையில்100 பேர் தங்களை முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

தூத்துக்குடி:
தமிழக வெற்றிக் கழகத்துடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) மேற்கொண்ட அரசியல் நகர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த IUML நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சுமார் 100 பேர் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.
​தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடைபெற்ற இந்த இணைப்பு விழாவிற்கு, திமுக வடக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன் தலைமை தாங்கி, புதிதாக இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். IUML மாவட்ட துணைத்தலைவர் நவ்ரங் சகாப்தீன், மாவட்ட துணைச் செயலாளர் முகமது அலி பாட்ஷா ஆகியோர் தலைமையில் இந்த இணைப்பு நிகழ்ந்தது.
​நிகழ்ச்சியில் பேசிய கீதா ஜீவன், “கருப்பு–சிவப்பு கொடியின் கொள்கையோடு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். திமுக ஆட்சியின் சாதனைகளையும் நலத்திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்த்து கழகத்தின் வெற்றிக்காக உழைக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
​இந்நிகழ்வில் நகரச் செயலாளர் ஜாபர் சாதிக்கான், வழக்கறிஞர் அணி முகமது ரபிக், மன்சூர் அபுதாகிர் யூசூப், அன்வர் பாட்ஷா உள்ளிட்ட 100 நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், மருத்துவ அணி தலைவர் அருண்குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

​”கொள்கை மாறுபாட்டால் விலகல்” — நிர்வாகிகள் விளக்கம்
​திமுகவில் இணைந்த நிர்வாகிகள் கூறுகையில்; முத்தமிழ் அறிஞர்”கலைஞர் காலம் தொட்டு தலைவர் மு.க.ஸ்டாலின் காலம் வரை 60 ஆண்டுகளுக்கும் மேலாகக் ஐஎம்எல்யு கொள்கைப் பிடிப்போடு பயணித்த கட்சி, தற்போது தடம் மாறியுள்ளதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதன் காரணமாகவே திமுகவில் இணைந்துள்ளோம். இது முதல் கட்டம்தான்; அடுத்ததாக ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பலர் திமுகவில் இணையவுள்ளனர்” என்று தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன