செய்திகள்அண்மை செய்திகள்

தூத்துக்குடியில் மின்னொளி கபடி போட்டி: 2ம் நாள் போட்டிகளை மேயர் ஜெகன் தொடங்கி வைத்தார்

Share the news

தூத்துக்குடி தாமோதரன் நகரில் நடைபெற்று வரும் மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டியின் 2-ம் நாள் போட்டிகளை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி தாமோதரன் நகர் ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு, மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் ஆதரவுடன், சண்முகபுரம் கபடி கிளப் மற்றும் தாமோதரநகர் சந்தன மாரியம்மன் கோவில் இளைஞர் அணி நண்பர்கள் குழு இணைந்து நடத்தும் ‘முருகேசன் நாடார் நினைவு கோப்பைக்கான’ 2-ம் ஆண்டு மாநில அளவிலான கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மின்னொளி கபடி போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

​இப்போட்டியின் 2-ம் நாள் ஆட்டங்களை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து, முதல் போட்டியில் களம் கண்ட சென்னை சாய் மற்றும் திருச்சி ஆதவன் கல்லூரி அணிகளின் வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து, உற்சாகப்படுத்திய மேயர், போட்டியை ரசித்துப் பார்த்தார்.

​போட்டி முடிவுகள்:
​முதல் போட்டி: சென்னை சாய் கல்லூரி அணி, திருச்சி ஆதவன் கல்லூரி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
​இரண்டாவது போட்டியாக; கோவை கற்பகம் கல்லூரி அணியுடன் மோதிய கரூர் சேரன் கல்லூரி அணி வெற்றி பெற்றது.
​மூன்றாவது போட்டி: தூத்துக்குடி காமராஜர் கல்லூரி அணியை எதிர்த்து விளையாடிய சென்னை சாய் கல்லூரி அணி வெற்றி வாகை சூடியது.
​பெண்கள் பிரிவு: கோபி பிகேஆர் கல்லூரி அணியும், கிருஷ்ணகிரி யூனிக் கல்லூரி அணியும் மோதியதில், கோபி பிகேஆர் கல்லூரி அணி வெற்றி பெற்றது.

​போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ‘கபடி’ கந்தன் சிறப்பாகச் செய்திருந்தார். மேலும் ஸ்ரீ செல்வ விநாயகர் – ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் நிர்வாகிகள், தலைவர்கள் வெள்ளத்துரை, வெற்றிவேல், செயலாளர் அந்தோணி ராஜ், பொருளாளர் சடகோபன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைத்துச் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, சி.எஸ்.ராஜா, சண்முகபுரம் பகுதி திமுக செயலாளர் சுரேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் ஆ.பாப்பாத்தி, முத்துவேல், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், பிரதிநிதிகள் ஏசுவடியான், பிரபாகர், பாலரூபன், தொமுச மின்வாரிய சங்க தலைவர் பேச்சிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன