Uncategorized

தூத்துக்குடியில் மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி கல்லூரி அணிகள் மோதல்

Share the news

தூத்துக்குடி தாமோதரன் நகரில், முருகேசன் நாடார் நினைவு கோப்பைக்கான மாநில அளவிலான கபடி போட்டிகள் நடைபெறுகின்றன

தூத்துக்குடி சண்முகபுரம் தாமோதரன் நகரில், முருகேசன் நாடார் நினைவு கோப்பைக்கான 2-ஆம் ஆண்டு மாநில அளவிலான கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் மின்னொளி கபடி போட்டிகள் ஆகஸ்ட் 28 அன்று விறுவிறுப்பாகத் தொடங்கியது.

​தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் ஆதரவுடன், சண்முகபுரம் கபடி கிளப் மற்றும் தாமோதரன் நகர் சந்தன மாரியம்மன் கோவில் இளைஞர் அணி நண்பர்கள் குழு இணைந்து இப்போட்டியை நடத்துகின்றன.

முதல் நாள் போட்டிகள்: ஆண்களுக்கான தொடக்க ஆட்டத்தில் சென்னை லயோலா கல்லூரி அணியும், கரூர் சேரன் கல்லூரி அணியும் மோதின. இப்போட்டியை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (TMB) மண்டல மேலாளர் பரணிதரன் தொடங்கி வைத்தார். வங்கியின் உதவி துணைத் தலைவர் கவாஸ்கர் முன்னிலை வகித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கரூர் சேரன் கல்லூரி அணி 36-35 என்ற புள்ளி கணக்கில் திரில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அணியும், திருச்சி ஆதவன் கல்லூரி அணியும் மோதின. இப்போட்டியை தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தலைமையேற்று தொடங்கி வைத்தார். இதில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அணி வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் சென்னை லயோலா கல்லூரி அணி வெற்றி பெற்றது.

தொடக்க விழாவில் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, பகுதி செயலாளர் ஜெயக்குமார், போட்டி ஏற்பாட்டாளர் கபடி கந்தன், அமெச்சூர் கபடி கழக செயலாளர் மைக்கேல், நிர்வாகிகள் கண்ணன், ராஜா, சுரேஷ்குமார், திமுக வட்ட செயலாளர்கள் பொன்ராஜ், சுரேஷ் மகாராஜன், கங்கா ராஜேஷ், பாலகுருசாமி, கருப்பசாமி, அறங்காவலர் செந்தில்குமார், மருத்துவர் அணி அருண்குமார், தகவல் தொழில்நுட்ப அணி மா.பிரபு, சி.என்.அண்ணாதுரை பிரதிநிதிகள் பாஸ்கர், மதியழகன், பாலரூபன், முத்துராஜ், காமராஜ் மற்றும் அதிமுக நிர்வாகி அந்தோணி ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இன்றைய ஆட்டங்கள் மற்றும் பரிசளிப்பு: இரண்டாம் நாள் போட்டிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் அமெச்சூர் கபடி கழகத் தலைவருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார். ​இத்தொடரின் இறுதிப் போட்டியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தொடங்கி வைத்து, வெற்றி பெறும் அணிகளுக்குப் பரிசுகளையும் கோப்பைகளையும் வழங்க உள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன