மேட்டுப்பட்டி உமைய பார்வதி ஆலய அன்னதானம் கீதாஜீவன் தொடங்கிவைத்தார்
தூத்துக்குடி மேட்டுப்பட்டி ஸ்ரீ உமைய பார்வதி அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தொடங்கிவைத்தார்
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மேட்டுப்பட்டி பகுதியில் முத்தரையர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீஉமைய பார்வதி அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் துவக்கி வைத்தார். முன்னதாக கோவில் தர்மகர்த்தா, நிர்வாகிகள் மற்றும் ஊர்த் தலைவர் சார்பில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவனுக்கு வரவேற்பு அளித்து மரியாதை செய்யப்பட்டது.
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் பக்தர்களிடம் பேசுகையில்;
என் மீது அளவு கடந்த அன்பும் பாசம் வைத்துள்ள இப்பகுதி மக்களுக்கும், ஸ்ரீ உமைய பார்வதி கோவில் நிர்வாகிகள், ஊர்த் தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆலயத்தின் கோவில் கொடை விழா அதனை ஒட்டி நடைபெற உள்ள அத்தனை சுபநிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜையில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் நடைபெற்ற அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்து பக்தர்களுக்கு உணவு பரிமாறினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மண்டலத்தலைவா் நிா்மல்ராஜ், பகுதி செயலாளா் ஜெயக்குமாா், முத்துக்குளியல் தொழிலாளா்கள் சங்க தலைவர் இசக்கிமுத்து, முத்தரையர் ஊர் தர்மகர்த்தா சந்தன்ராஜ் தலைவர் கருப்பண்ணன் செயலாளர் ராஜேந்திரன் பொருளாளர் பாலு மாதவநாயர் காலனி ஊர் தலைவர் சந்தன செல்வன், தர்மகர்த்தா ரவி பொருளாளர் ரூபன், சுவாமி விவேகானந்தர் காலனி தர்மராஜா, நிர்வாகிகள் கணேசன், செயலாளர் முருகன் பொருளாளர் மணிராஜ், புதிய துறைமுகம் பகுதி நிர்வாகிகள் அண்ணாதுரை, மோகன், கௌதம். முக்கிய நிர்வாகிகள் சாந்தகுமார் முத்து பாஸ்கர் முனீஸ்வரன் இசக்கிமுத்து மாரி செல்வம் மற்றும் திமுக மாணவரணி மாவட்ட அமைப்பாளர் சின்னதுரை, அறங்காவலர் செந்தில்குமார், ஐடி விங் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் பிரபு, தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, வட்டச் செயலாளர் கங்கா ராஜேஷ், பிரதிநிதி பாஸ்கர் உள்பட கோவில் நிா்வாகிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.
