செய்திகள்அண்மை செய்திகள்

விவசாயிகள் மீதான அடக்கு முறைக்கு பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கண்டனம்

Share the news

தாமிரபரணி கடைமடை பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கக்கோரி சாலை மறியல் செய்த விவசாயிகள் மீது நடைபெற்ற அடக்குமுறைக்கு பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கண்டனம்

தூத்துக்குடி.
பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து விவசாயப் பயன்பாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி, ஸ்ரீவைகுண்டத்தில் வடகால் கடைமடை பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் புதுக்கோட்டை தட்டாப்பாறை விலக்கில் தூத்துக்குடி – நெல்லை சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் காவல்துறையினர் கடுமையான அணுகுமுறையைக் கையாண்டு கைது செய்த சம்பவத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
​இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
​விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னையான பாசன நீர் கேட்டு அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மீது காவல்துறை அடக்குமுறையை ஏவி கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை அரசு உடனடியாகப் பரிசீலித்து, அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
​நீர் பங்கீட்டில் ஏதேனும் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பின், அதிகாரிகள் விவசாயிகளை நேரில் அழைத்து விளக்கமளிக்க வேண்டும். அதை விடுத்து, ஜனநாயக முறையில் போராடும் விவசாயிகளை காவல்துறையைக் கொண்டு ஒடுக்குவது ஏற்புடையதல்ல. அரசு உடனடியாகத் தலையிட்டு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பாசன நீர்ப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் தெரிவித்துள்ளார்
.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன