செய்திகள்அண்மை செய்திகள்

வஉசி பிறந்தநாள் விழா. சிலைக்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மரியாதை செலுத்தினார்

Share the news

தூத்துக்குடியில் கப்பலோட்டிய தமிழர், சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனார் 155வது பிறந்தநாளை முன்னிட்டு அன்னாரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

தூத்துக்குடி,
கப்பலோட்டிய தமிழர்,
சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனார் 155வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள வஉசி சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சாா்பில், மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்னர் சிவன் கோவில் தேரடியில் மாவட்ட பிரதிநிதி எஸ்.சக்திவேல், ஓம் சக்தி சங்கர் ஏற்பாட்டில் நடைபெற்ற வஉசி பிறந்தநாள் விழாவில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்ட வஉசி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பெண்களுக்கு சேலைகளை வழங்கி இனிப்புகளையும் வழங்கினார்.

விழாவில் மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், மாவட்ட அணி நிர்வாகிகள் குபேர் இளம்பரிதி, கவிதாதேவி, அருண்குமார், பிரபு, நாகராஜன், சேசையா, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், ரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரிதங்கம், மாநகர அணி நிர்வாகிகள் முருக இசக்கி, கிறிஸ்டோபர் விஜயராஜ், ஜெயக்கனி, சோமநாதன், ஐடி விங் சி.என்.அண்ணாதுரை, எம்.பரமசிவம், ஐ.ரவி, ரூபராஜா, பிக்கப் தனபால், கிங் பாலா மற்றும் சி.எஸ்.முரளிதரன் எஸ்பி.ராஜன், நாராயணசாமி, வட்டச் செயலாளர்கள் கங்கா ராஜேஷ், கதிரேசன், டென்சிங், பாலகுருசாமி, சுப்பையா, மூக்கையா, கருப்பசாமி, செல்வராஜ், சதீஷ்குமார், செந்தில்குமார், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், நாகேஸ்வரி, பொன்னப்பன், கந்தசாமி, ராஜேந்திரன், பகுதி மகளிர் அணி துணை அமைப்பாளர் ரேவதி, வட்டப் பிரதிநிதி பாஸ்கர், ரஜினி முருகன் மற்றும் அறங்காவலர் செந்தில் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன