பெரியார் பிறந்தநாள் – திமுக 78 ஆவது ஆண்டு விழா, கீதாஜீவன் தலைமையில் உற்சாக கொண்டாட்டம்
தூத்துக்குடியில் தந்தை பெரியார் பிறந்தநாள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 78 ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, திமுக கொடியேற்றி முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் உற்சாகக் கொண்டாட்டம்.
தூத்துக்குடி
தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தென்பாகம் காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர் மாவட்ட செயலாளர் கீதாஜீவன் தலைமையில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.
தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. தலைமை அலுவலகம் கலைஞர் அரங்கம் வளாகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 78-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் திருவுருவப் படத்திற்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர், வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 60 அடி உயரக் கொடிக்கம்பத்தில் தி.மு.க. கொடியினை முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் ஏற்றி வைத்து, நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கினார். தொடர்ந்து திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆணையின் பேரில் சமூக நீதி நாள் உறுதிமொழியை திமுகவினர் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநில அணி நிர்வாகிகள் புளோரன்ஸ்,
அன்பழகன், மண்டல தலைவர் பாலகுருசாமி, மாவட்ட அணி நிர்வாகிகள் கவிதா தேவி, குபேர் இளம்பரிதி, சீனிவாசன், அருண்குமார், பழனி, ஐடி விங் பிரபு, நாகராஜன், அருணா தேவி, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், மேகநாதன், சுரேஷ்குமார், மாநகர அணி நிர்வாகிகள் ஜீவன் ஜேக்கப், முருகஇசக்கி, கிறிஸ்டோபர் விஜயராஜ், சி.எஸ்.முரளிதரன், ஜெயக்கனி, சாரதி, ஐடி விங் அண்ணாதுரை, இளைஞரணி ஐ.ரவி, சங்கர நாராயணன், சாகுல் ஹமீது, சந்தனமாரி, நலம் ராஜேந்திரன், ரூபராஜா, செல்வ லட்சுமி, செய்யது காசிம், தொண்டரணி சங்கர் மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், செல்வகுமார், தொமுச நிர்வாகிகள் முருகன், மரியதாஸ், வேல்முருகன், வட்டச் செயலாளர்கள் கதிரேசன், கங்கா ராஜேஷ், பாலகுருசாமி, மூக்கையா, சிங்கராஜ், டென்சிங், சுரேஷ் மகாராஜா, பொன்ராஜ், ரவீந்திரன், சுப்பையா, சுரேஷ், பத்மாவதி, சதீஷ்குமார், செந்தில்குமார், சேகர், மாரீஸ்வரன். கவுன்சிலர்கள் விஜயகுமார், ரெக்ஸ்லின், சரவணகுமார், கந்தசாமி, பொன்னப்பன், ஜெயசீலி, பேபி ஏஞ்சலின், வைதேகி, பவானி, நாகேஸ்வரி, மரிய கீதா, ராஜேந்திரன், ஆறுமுகம், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மணி, வட்ட பிரதிநிதிகள் பாஸ்கர், கார்த்திகேயன், ஜேசு பாலன், பாலரூபன், மற்றும் சுமன், நாராயண சாமி, முகமது அலி பாஷா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
