அண்ணாமலை பிறந்தநாளில் கல்வி உதவித் தொகை வழங்கல்
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மண்டல் பிஜேபி சார்பில் கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி, பிஜேபி தெற்கு மண்டல் சார்பில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் 42வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஏழை மற்றும் திறமையான மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி முத்தையாபுரம் தங்கமாள்புரம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் பொட்டல்காடு பள்ளிகளில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில், 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.
மாணவர்கள் கல்வியில் மேலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, மாணவர்களின் கல்வி பயணத்திற்கு ஒரு முக்கிய ஊக்கமாக அமைந்ததாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களின் முயற்சியை பாராட்டி அவர்களை மேலும் உயர்வுக்கு ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த உதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான முழு ஏற்பாடுகளையும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பிரிவு மாவட்ட தலைவர் சின்னதங்கம் செய்திருந்தார். நிகழ்ச்சியில் தெற்கு மண்டல் தலைவர் மாதவன், மாவட்ட துணை தலைவர் மாசானம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சி, அவர்களின் எதிர்கால முன்னேற்றம் மற்றும் சமூகத்தில் சிறந்த நிலையை அடைய வேண்டிய அவசியம் குறித்து நிர்வாகிகள் உரையாற்றினர்.