செய்திகள்அண்மை செய்திகள்

மாசற்ற பசுமை மாநகராட்சியை உருவாக்குவதே இலட்சியம்: மேயர் ஜெகன் உறுதி

Share the news

மாசு இல்லாத தூத்துக்குடி மாநகராட்சியை உருவாக்கி மக்கள் நலனை பேணி பாதுகாப்பது தான் எங்களது கடமை – மேயர் ஜெகன் பொியசாமி உறுதி

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் சுழற்சி முறையில் வளர்ச்சிப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பாத்திமா நகர், ஜார்ஜ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் புதிய பேவர் பிளாக் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணிகள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பழைய வடிகால்களை இணைக்கும் இடங்களை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து தனியார் பங்களிப்புடன் தெருவிளக்குகள் அமைக்கும் பணிகளையும், கிழக்கு மண்டல நுண் உர செயலாக்க மையத்தின் செயல்பாடுகளையும் மேயர் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி:
​மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் பாரபட்சமின்றி, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அனைத்துப் பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிழக்கு மண்டலத்தில் உள்ள நுண்உரம் செயலாக்க மையம் கடந்த அதிமுக ஆட்சியில் 23.08.2018ல் தொடங்கப்பட்டு 24. 25, 40, 46, 47 ஆகிய ​5 வார்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் மக்கும் கழிவுகள் மூலம் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. மக்காத கழிவுகள் உடனடியாகத் தருவைகுளம் கிடங்குக்கு அகற்றப்படுகின்றன.
​தூய்மைப் பணியாளர்கள் சுகாதாரமான சூழலில் பணியாற்றும் வகையில் மையங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
​தூத்துக்குடியை மாசில்லா மாநகராட்சியாக மாற்றும் நோக்கில், ‘வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்’ திட்டத்திற்கும் சுகாதாரப் பணிகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இந்த ஆய்வின் போது துணை மேயர் ஜெனிட்டா, சுகாதார ஆய்வாளர் ஹரிகணேஷ், திமுக நிர்வாகிகள் மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ்,, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மாநகர அமைப்பாளர் டேனியல், பகுதி பிரதிநிதி பிரபாகர், ஜேஸ்பர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன