தூத்துக்குடியில் டிஎம்பி ஏடிஎம் மேயர் ஜெகன் திறந்து வைத்தார்
தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் புதிய ஏ.டி.எம். மையத்தினை மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்.
தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சார்பில், தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் பயணிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் பொதுமக்கள் நலன் கருதி ஏ.டி.எம் மற்றும் பணம் டெப்பாசிட் மையத்தை அமைத்து உள்ளது. இந்த புதிய ஏ.டி.எம். திறப்பு விழா ஜூலை 16 அன்று நடைபெற்றது. விழாவிற்கு டிஎம்பி வங்கியின் நிர்வாக இயக்குநர் எம்.டி.வின்சென்ட் தலைமை தாங்கினார். நிர்வாகத் துணைத் தலைவர் ஆனந்த கணேசன் முன்னிலை வகித்தனர், தூத்துக்குடி மண்டல மேலாளர் தரணிதரன் வரவேற்புரையாற்றினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி புதிய ஏ.டி.எம். மையத்தைத் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் பிரியங்கா பணம் டெபாசிட் செய்யும் இயந்திரத்தின் செயல்பாட்டைத் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வங்கி கிளை மேலாளர்கள் இளங்கோவன், சேர்மன் கவாஸ்கர், நீதிராஜன், பாலாஜி குமார் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஹரி கணேஷ், மேயரின் நேர்முக உதவியாளர்கள் ரமேஷ், ஜேஸ்பர், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரை மணி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன் மற்றும் வங்கியின் வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.
