தூத்துக்குடியில் பாஜக சார்பில் தேசியக் கொடி அணிவகுப்பு!போதை இல்லா பாரதம் உருவாக்க உறுதிமொழி
சுதந்திர தினத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் தேசிய உணர்வை வெளிப்படுத்தும் வகையில் மூவர்ணக் கொடியுடன் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற்றது.
தூத்துக்குடி,
சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் தேசிய உணர்வை வெளிப்படுத்தும் வகையில் மூவர்ணக் கொடியுடன் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற்றது.
புதிய மாநகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கிய இந்த அணிவகுப்பில் 300-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கைகளில் தேசியக் கொடியை ஏந்தி, “வந்தே மாதரம்”, “பாரத் மாதா கி ஜே” முழக்கங்களுடன் சிவன் கோவில் வரை அவர்கள் அணிவகுத்துச் சென்றனர். சுதந்திரப் போராட்ட தியாகிகளை நினைவுகூர்ந்த இக்கூட்டத்தில், தேசியக் கொடியின் பெருமையும் தேச ஒற்றுமையும் வலியுறுத்தப்பட்டது.
இதன் நிறைவாக, “2047-க்குள் போதை இல்லாத பாரதத்தை உருவாக்குவோம்” என்ற பிரதமர் மோடியின் இலக்கை நனவாக்கும் வகையில், “போதை இல்லாத பாரதத்தை உருவாக்குவோம்” என்று பா.ஜ.க.வினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ராஜேஷ், ஆறுமுகம், செல்வராஜ், மாவட்ட துணைத் தலைவர்கள் சிவராமன், முத்துராமலிங்கம், மாசாணம், இசக்கிமுத்து, காளிராஜா மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சி பொறுப்பாளர்களான வணிகப் பிரிவு மாவட்டத் தலைவர் செந்தில், வடக்கு மண்டல பிரபாரி சரவணகுமார், சிறுபான்மை அணி மாவட்ட செயலாளர் எம். ஜெயபிரகாஷ், மேற்கு மண்டல துணைத் தலைவர் இசக்கி துரை, மகளிர் அணி மாவட்ட தலைவர் வெள்ளத்தாய் மற்றும் பல்வேறு மண்டல தலைவர்கள், அணிகளின் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் திரளாகப் பங்கேற்றனர்.
