செய்திகள்அண்மை செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் தலைவர் தேசிய கொடியை ஏற்றினார்

Share the news

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மண்டல தலைவர் அன்னலட்சுமி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் 80வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி கோட்டுராஜா, உதவி ஆணையர் காந்திமதி முன்னிலையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். சுகாதார அலுவலர் ராஜபாண்டி அனைவரையும் வரவேற்றார்.
மாமன்ற உறுப்பினர்கள் இசக்கி ராஜா, விஜயலட்சுமி, ஜான் சீனிவாசன், முன்னாள் கவுன்சிலரும் திமுக பொது குழு உறுப்பினருமாகிய கோட்டுராஜா, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் கோட்டுராஜா பேசுகையில்;
சுதந்திர தின விழாவில் மக்கள் பிரதிநிதிகள் கொடியேற்றும் உரிமையை பெற்று தந்த முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கிறோம். தூத்துக்குடி மாநகராட்சி உருவாவதற்கு காரணமாக இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என். பெரியசாமி அவர்களுக்கும், இந்த மாநகராட்சிக்கு நல்ல திட்டங்களை வகுத்து சிறப்பான முறையில் வழிகாட்டிய அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோருக்கும், தூத்துக்குடி மாநகராட்சியை சிறப்பாக வழி நடத்தி முதன்மை மாநகராட்சியாக உயர்த்துவதற்கு பாடுபட்டு வரும் மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் ஆணையர் பிரியங்கா, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், சுகாதார, தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

விழாவில் மாமன்ற உறுப்பினர்கள் விஜயலட்சுமி, கண்ணன், கந்தசாமி, ஜான் சீனிவாசன், குழாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள் கீர்த்தனா, கார்த்திகா, விக்னேஷ்வரன், சந்தனகுமார், சுபியான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன