செய்திகள்உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் MSME நிறுவனங்களுக்கு டிஜிட்டல் மயமாக்கல் – AI தொழில்நுட்ப கருத்தரங்கு.

Share the news

சிறு, குறு நிறுவனங்களுக்கு AI மற்றும் ZED, PEACE திட்டங்கள் குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் மற்றும் துடிசியா சார்பில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களை தங்களது தொழிலில் பயன்படுத்தி உற்பத்தித்திறன் மற்றும் போட்டித்திறனை மேம்படுத்தும் வகையில் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் AI தொழில்நுட்பம், ZED மற்றும் PEACE திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் (DIC) மற்றும் தூத்துக்குடி மாவட்ட சிறு மற்றும் குறுந் தொழில் சங்கம் துடிசியா (THUDITSSIA) இணைந்து இக்கருத்தரங்கை துடிசியா அலுவலக வளாகத்தில் நடத்தினார்கள். நிகழ்ச்சிக்கு மாவட்ட தொழில் மையத்தின் துணை இயக்குநர் (தொழில்நுட்பம்) என்.ஷர்மிளா தேவி வரவேற்புரை வழங்கினார். மாவட்ட தொழில் மையத்தின் இணை இயக்குநர் / பொது மேலாளர் ஏ.ஸ்வர்ணலதா நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். துடிசியா தலைவர் தர்மராஜ் வாழ்த்துரை வழங்கினார்.

தொடர்ந்து நடைபெற்ற தொழில்நுட்ப அமர்வில் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு குறித்து Training and Operation நிறுவனத்தின் பொது மேலாளர் மாலா ஷர்மா, முதன்மை தொழில்நுட்ப அதிகாரி ரமேஷ் முருகன் மற்றும் ஐஐடி மெட்ராஸ், Center for Excellence நிறுவனத்தின் திட்ட மேலாளர் டாக்டர் கவிதா ஆகியோர் விளக்கினர். மேலும், எம்எஸ்எம்இ நிறுவனங்களின் தர மேம்பாடு, உற்பத்தித்திறன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில் நடைமுறைகளை ஊக்குவிக்கும் ZED திட்டம் குறித்து ZED Resource Person மற்றும் SPOC கார்த்திகேயன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

PEACE திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோயம்புத்தூரைச் சேர்ந்த கிரீன் சோலார் டெக்னாலஜி நிறுவனத்தின் திட்ட முதன்மை அதிகாரி சிவகுமார் விளக்கமளித்தார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில்முனைவோர் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, AI மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை தொழில் எவ்வாறு பயன்படுத்துவது, ZED மற்றும் PEACE போன்ற திட்டங்களின் மூலம் வளர்ச்சிக்கு பெறக்கூடிய பயன்கள் குறித்து கேட்டறிந்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் மாவட்ட தொழில் மையத்தின் உதவி இயக்குநர் (தொழில்நுட்பம்) நாகஜோதி நன்றியுரை வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன