செய்திகள்அண்மை செய்திகள்

தூத்துக்குடி புத்தகத் திருவிழா மேயர் ஜெகன், ஆணையர் துவக்கி வைத்தனர்

Share the news

தி சென்னை சில்க்ஸின் “தூத்துக்குடி புத்தகத் திருவிழா 2026”. மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் பிரியங்கா தொடங்கி வைத்தனர்

தூத்துக்குடி தி சென்னை சில்க்ஸ் வளாகத்தில் “தூத்துக்குடி புத்தகத் திருவிழா – 2026” கோலாகலமாகத் தொடங்கியது. தி சென்னை சில்க்ஸ் மற்றும் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழாவை, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ரிப்பன் வெட்டி முறைப்படி திறந்து வைத்தார். மாநகராட்சி ஆணையர் பிரியங்கா குத்துவிளக்கேற்றி நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.
​தி சென்னை சில்க்ஸ் தூத்துக்குடி கிளை மேலாளர் பாண்டி, தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் ரவிவர்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் கார்த்திக் அனைவரையும் வரவேற்றார். முதல் விற்பனையை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைக்க, புத்தகத்தை தி சென்னை சில்க்ஸ் கிளை மேலாளர் செல்வம் பெற்றுக் கொண்டார்.

இப்புத்தகக் கண்காட்சி ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 6-ஆம் தேதி வரை தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடைபெறுகிறது. இதில் ஒரு லட்சம் தலைப்புகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் நூல்கள் இடம் பெற்றுள்ளன. நாவல்கள், வாழ்க்கை வரலாறுகள், மருத்துவம், இலக்கியம், அறிவியல், பொருளாதாரம், குழந்தைகள் நூல்கள் மற்றும் போட்டித் தேர்வு வழிகாட்டி நூல்கள் உள்ளிட்டவை வாசகர்களுக்காக வைக்கப்பட்டுள்ளன.

10% தள்ளுபடி மற்றும் சிறப்புச் சான்றிதழ்கள்
​இங்கு விற்பனை செய்யப்படும் அனைத்துப் புத்தகங்களுக்கும் 10% நேரடித் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் ​ரூ.1,000-க்கு மேல் புத்தகம் வாங்குவோருக்கு “வாசிப்பு செம்மல்” சான்றிதழ் வழங்கப்படும்.
​ரூ.2,000-க்கு மேல் புத்தகம் வாங்குவோருக்கு “வாசிப்பு சிகரம்” சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படும்.

மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் போட்டிகள் மாணவ-மாணவிகளின் வாசிப்பு ஆர்வம், சிந்தனைத் திறன் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் நாள்தோறும் ஓவியம், கட்டுரை, திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் கதை எழுதும் போட்டிகள் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை நடத்தப்படுகின்றன. இதில் பங்கேற்கப் பவர்களுக்கு சான்றிதழ்களும், வெற்றி பெறுவோருக்குப் பரிசுகளும் வழங்கப்படும் என விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நிகழ்ச்சியில் ​தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கத் துணைத் தலைவர் ராஜபாண்டி நன்றி கூறினார். மாநகராட்சி ஆணையரின் உதவியாளர் துரைமணி, மேயரின் உதவியாளர் ரமேஷ், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், ஜோஸ்பர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன