அண்மை செய்திகள்செய்திகள்

தூத்துக்குடியில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் ஆட்சியர் ஆலோசனை

Share the news

தூத்துக்குடியில் வருகிற மே 4ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தல் – 2026 க்கான வாக்கு எண்ணிக்கை, வருகின்ற மே 4-ம் தேதி திங்கட்கிழமை தூத்துக்குடி வஉசி பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதனையொட்டி, வாக்கு எண்ணும் பணிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை ஒருங்கிணைப்பு அலுவலர்களின் பொறுப்புகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான விஷூ மகாஜன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் மதன், மாவட்ட வருவாய் அலுவலர் குரு சந்திரன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடவுள்ள ஒருங்கிணைப்பு அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வாக்கு எண்ணிக்கையின் போது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், வாக்கு எண்ணும் பணியின்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் அலுவலர்களின் கடமைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளும், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாக்கு எண்ணிக்கையை எவ்விதத் தடங்கலும் இன்றி, நேர்மையான முறையில் நடத்தி முடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் அறிவுறுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன