அண்மை செய்திகள்செய்திகள்

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக செயலாளர்!

Share the news

சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகர் பகுதியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கொலைமிரட்டல் விடுத்த தவெக வட்ட செயலாளர் கைது

சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி கோடை விடுமுறையையொட்டி வட சென்னை ஆர் கே நகர் தொகுதிக்குட்பட்ட காசிமேடு சிங்காரவேலன் நகர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வந்துள்ளார்.

ஏப்ரல் 23ம் தேதி அந்த சிறுமி வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த தவெக வட்ட செயலாளர் தினேஷ் என்கின்ற பாம்பு தினேஷ் என்பவர் தனது வீட்டிற்கு, விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்றுள்ளார் அங்கு தனது அறைக்கு சிறுமியை அழைத்துச் சென்ற பாம்பு தினேஷ் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும் தான் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதை வெளியில் சொன்னால் கழுத்தை நெரித்து கொன்று விடுவேன் என்று சிறுமியை மிரட்டி இருக்கிறார்.
தனக்கு நேர்ந்த கொடுமைகளை மயிலாப்பூரில் உள்ள தமது வீட்டிற்கு சென்ற சிறுமி, தன் சித்தியிடம் நடந்த கொடுமைகளை கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் சித்தி உடனடியாக சிறுமியின் பெற்றோருக்கு இந்த தகவலை கூற கடந்த 3ம் தேதி இதுகுறித்த புகாரை சிறுமியின் பெற்றோர் காசிமேடு காவல் நிலையத்தில் அளித்துள்ளனர்.
இது போக்சோ வழக்கு என்பதால் காசிமேடு போலீசார் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு பரிந்துரைத்ததன் பேரில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் நான்காம் தேதியே தினேஷை கைது செய்ய முயன்றுள்ளனர்.
ஆனால் தினேஷ் ஆர் கே நகர் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட மரிய வில்சனுக்கு ஆதரவாக வாக்கு என்னும் மையத்திற்கு சென்றிருந்ததால் கைது செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது அதனைத் தொடர்ந்து நேற்று இரவு தவெக பாம்பு தினேஷை ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட பாம்பு தினேஷ் 43வது வார்டு தமிழக வெற்றிக் கழக வட்டச் செயலாளர் என்பதும் ஆர்கேநகர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள மரிய வில்சனுடன சேர்ந்து அவருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தவெக வட்ட செயலாளர் பாம்பு தினேஷ் என்பவரால் 10 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தமிழக பெண்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்
.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன