உள்ளூர் செய்திகள்செய்திகள்

தூத்துக்குடி பூ மார்க்கெட் மதுபான கடையை அகற்ற 30 வார்டு திமுக கோரிக்கை

Share the news

தூத்துக்குடி மாநகரின் முக்கிய பகுதியான காய்கறி மார்க்கெட் வடக்கு வாசல் மற்றும் பூ மார்க்கெட் பகுதி எப்பொழுதும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளால் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு பகுதியாகவும். இந்த இடம் அதிகாலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்லக்கூடிய மிக முக்கிய வீதி ஆகும். இந்த இடத்தில் டாஸ்மாக் மதுபான கடை அமைந்துள்ளது. இந்த மதுக் கடையால் பெண்கள் மற்றும் வியாபாரிகள் பொதுமக்களுக்கு இடையூறு இருந்து வருவதாக கூறப்பட்ட நிலையில்.

டூவிபுரம் 1வது தெரு கிழக்கே பூ மார்க்கெட் எதிரே உள்ள டாஸ்மாக் மதுபான (கடை எண் : 10112) சம்பந்தப்பட்ட மது கடையால் வியாபாரிகள், பெண்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருப்பதால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான கடையை உடனடியாக அகற்றக் கோரி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக தூத்துக்குடி மாநகரம் அண்ணா நகர் பகுதிக்குட்பட்ட 30 வது வார்டு திமுக சார்பில் அண்ணாநகர் பகுதி திமுக செயலாளர் DA.ரவீந்திரன் தலைமையில், வட்ட செயலாளர் செந்தில்குமார், பிரதிநிதிகள் கார்த்திகேயன் சுப்பிரமணியன் மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் அன்பழகன் ஆகியோர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கலால் பிரிவு அலுவலகத்தில் உதவி ஆணையாளர் சுப்புலட்சுமி மற்றும் தூத்துக்குடி டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடமும் காய்கறி மார்க்கெட் மற்றும் பூ மார்க்கெட் அருகே அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கடையை உடனடியாக அகற்றக்கோரி மனு கொடுத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன