அமைச்சர் மதன்ராஜா நிகழ்ச்சியை புறக்கணித்த தூத்துக்குடி தவெக’வினர்
அமைச்சராக பொறுப்பேற்று முதல்முறையாக தூத்துக்குடி வருகை தந்த அமைச்சர் மதன்ராஜா நிகழ்ச்சியை புறக்கணித்த தவெக நிர்வாகிகள்
தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெ.மதன்ராஜா தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அமைச்சரவையில் கடந்த மே 21ம் தேதி குறு சிறு – நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சராக பொறுப்பேற்ற கொண்டபின் முதன்முறையாக மே 28ல் ஒட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் தூத்துக்குடி 3வது மைலில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துவிட்டு தூத்துக்குடி நகருக்குள் வரும் வழியில் தமிழக அரசின் குரூஸ்பர்னாந்து மணிமண்டபம் கடந்து வந்து தென்பாகம் காவல் நிலையம் அருகில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அமைச்சர் சிலை வளாகம் பூட்டியிருந்ததால் 10 நிமிடம் கேட்டின் வௌியே நின்றிருந்தார் பின்னர் கேட் திறக்கப்பட்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர் வந்த வழியே திரும்பி சென்று குரூஸ் பர்னாந்து மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வந்த போது மாலை இல்லாத நிலையில் பின்னால் வந்த காாிலிருந்த மாலையை எடுத்து குரூஸ் பர்னாந்து சிலைக்கு மாலை அணிவித்துள்ளார். பின்னர் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள காமராஜர் காந்தி, அண்ணா, வஉசி, குரூஸ் பர்னாந்து உள்ளிட்ட தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்த பின் வழக்கம்போல் செய்தியாளர்கள் சந்திப்பு எதிர்பார்க்கப் பட்ட நிலையில் அவரது உதவியாளர் எந்த பேட்டியும் வேண்டாம் என்று பத்திாிகையாளர்களிடம் கூறியுள்ளனர்.
தவெக கொள்கை தலைவர் தந்தை பெரியார்’ரை புறக்கணித்த அமைச்சர்
வஉசி மார்க்கெட் அருகிலுள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று முடியும் வரையில் தூத்துக்குடி தொகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக முக்கிய நிா்வாகிகள் யாரும் கலந்து கொள்ளாமல் முற்றிலும் அமைச்சா் மதன்ராஜா நிகழ்ச்சியை புறக்கணித்தனர். தமிழக வெற்றிக் கழக கொள்கை தலைவர்களில் ஒருவரான தந்தை பெரியார் சிலைக்கு அமைச்சர் மரியாதை செலுத்தாமல் புறக்கணித்து சென்றது சலசலப்பை ஏற்படுத்தியது.
பின்னர் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்த அமைச்சர் மதன்ராஜாவை அரசு முறைப்படி மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, மாநகராட்சி ஆணையர் பரியங்கா, மாவட்ட வருவாய் அலுவலர் குருசந்திரன், கோட்டாட்சியர் பிரபு, தாசில்தார் திருமணி ஸ்டாலின், உள்ளிட்டோர் பூங்கொத்து புத்தகங்கள் கொடுத்து வரவேற்றனர். அமைச்சருக்குறிய நடைமுறை என்னவென்று அறியாத நிலை அவரோடு வருபவர்களுக்கும் புாியாத குழப்பத்தில் அமைச்சரின் நிகழ்ச்சி தூத்துக்குடியில் குழப்பத்தோடு முடிவுற்றது. இது குறித்து உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
